சினிமா செய்திகள்

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய சூர்யா + "||" + Surya who fulfills the desire of the boy suffering from muscular dystrophy

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய சூர்யா

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய சூர்யா
தேனியை சேர்ந்த சிறுவன் தினேஷ் குணப்படுத்த முடியாத தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
சிறுவன் தினேஷ் தனது உடல் உறுப்புகளை சிதைத்து வரும் நோயை எதிர்த்து போராடிக் கொண்டு ஓவியங்கள் வரைவதிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளான். அவன் வரைந்துள்ள ஓவியங்களை பார்த்து பலரும் வியக்கிறார்கள்.

நடிகர் சூர்யாவை சந்திப்பது தனது கனவாக இருக்கிறது என்று தினேஷ் கூறியிருந்தான். இதை அறிந்த சூர்யா தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் தினேசை அழைத்து வர ஏற்பாடு செய்தார். சிறுவன் தினேசை சூர்யா தனது வீட்டில் தந்தை சிவகுமார், சகோதரர் கார்த்தி ஆகியோருடன் சேர்ந்து சந்தித்தார். சிறுவன் தினேசுக்கு நடிகர் சிவகுமார் தனது ஓவியத்தை பரிசாக வழங்கினார். தினேசின் சிகிச்சைக்கான மருத்துவ செலவுகளை ஏற்பதாக சூர்யா உறுதி அளித்தார்.


சிறுவனிடம் சூர்யா கூறும்போது, ‘‘அடிமனதில் என்ன நடக்க வேண்டும் என்று நினைத்தாயோ அது இன்று நடந்து இருக்கிறது. உள் நெஞ்சத்திலிருந்து என்ன நினைக்கிறீர்களோ நம்புகிறீர்களோ அல்லது கனவு காண்கிறீர்களோ அது கண்டிப்பாக நினைவாகும். பெரிதாக கனவு காணுங்கள். ஒரு போதும் கனவு காண்பதை நிறுத்தாதீர்கள்’’ என்றார். சூர்யாவை சந்தித்தது சிறுவன் தினேசுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக அவனது பெற்றோர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ராணுவ உயர் அதிகாரியாக சூர்யா!
‘என்.ஜி.கே.,’ ‘காப்பான்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.
2. வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது - நடிகர் சூர்யா
வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
3. இணையதளத்தில் சூர்யா படக்காட்சி கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி
செல்வராகவன் இயக்கும் என்.ஜி.கே மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கும் பெயரிடப்படாத படம் ஆகிய 2 படங்களில் சூர்யா நடிக்கிறார்.