சினிமா செய்திகள்

டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு + "||" + Dolphins to intimidate resistance at Actress Trisha

டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு

டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக  நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு
நீச்சல் குளத்தில் டால்பின்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை திரிஷா வெளியிட்டார்.
நடிகை திரிஷா சமீபத்தில் துபாய் சென்று இருந்தார். அப்போது அங்குள்ள கடற்கரை சொகுசு ஓட்டலின் நீச்சல் குளத்தில் டால்பின்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த படங்களுக்கு கண்டதும் காதல் என்று தலைப்பிட்டு இருந்தார். இப்போது அந்த படங்கள் சர்ச்சையாகி உள்ளன.


திரிஷாவின் புகைப்படங்களை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். டால்பின்களை குளத்தில் அடைத்து வைத்து மனிதர்களுடன் விளையாட செய்வது அவற்றை கொடுமைப்படுத்துவது போன்றது ஆகும். பணக்காரர்கள் விளையாட்டுக்கு டால்பின்கள்தான் கிடைத்ததா? பீட்டா விளம்பர தூதுவராக இருந்து கொண்டு டால்பின்களை கொடுமைப்படுத்தி இருக்கிறீர்களே? என்று திரிஷாவை கண்டித்து உள்ளனர்.

ஐதராபாத்தில் உள்ள விலங்குகள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த பத்மஜா கூறும்போது, ‘‘மனிதர்களுடன் விளையாடுவது டால்பின்கள் வேலை இல்லை. விளையாடுவதற்கு அவை பொம்மையும் இல்லை. டால்பின்களை சித்ரவதை செய்து தாங்கள் சொல்லியபடி கேட்க வைக்கிறார்கள். டால்பின்களுடன் மனிதர்கள் விளையாடுவது கொடுமையானது’’ என்றார்.

இன்னொரு விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த பரிதா கூறும்போது, கடலில் வாழும் உயிரினம் டால்பின். பொழுதுபோக்கு பூங்காக்களில் அவை சுதந்திரமாக இருக்க முடியாது. அவைகளை விருப்பம்போல் வாழவிடுங்கள்’’ என்று கூறியுள்ளார். இந்த எதிர்ப்புகளால் திரிஷா அதிர்ச்சியாகி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை திரிஷா எடுத்த திடீர் முக்கிய முடிவு!!
தமிழில் முன்னணி நடிகையாக ஒரு டஜன் ஆண்டுகளுக்கு மேலாக திரையில் ஜொலித்து வரும் நாயகி திரிஷா தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.