கலாபவன் மணி வாழ்க்கை படமானது


கலாபவன் மணி வாழ்க்கை படமானது
x
தினத்தந்தி 21 Sep 2018 10:45 PM GMT (Updated: 21 Sep 2018 5:40 PM GMT)

தமிழ், மலையாள பட உலகில் முன்னணி வில்லன் மற்றும் குணசித்திர நடிகராக இருந்தவர் கலாபவன் மணி.

கலாபவன் மணி தமிழில் பாபநாசம், வேல், மோதி விளையாடு, ஆறு, மழை, ஏய், ஜித்தன், ஜெமினி, தென்னவன் என்று பல படங்களில் நடித்துள்ளார். கலாபவன் மணிக்கு சொந்தமான பண்ணை வீடு கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ளது.

அங்கு நண்பர்கள் சிலருடன் கடந்த 2016 மார்ச் மாதம் மது அருந்தினார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மரணம் அடைந்தார். பிரேத பரிசோதனையில் கலாபவன் மணியின் உடலில் மெத்தனால் என்ற வி‌ஷத்தன்மை வாய்ந்த ரசாயனம் கலந்து இருந்தது தெரியவந்தது.

இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகம் கிளப்பினர். சி.பி.ஐ விசாரணைக்கும் வற்புறுத்தினார்கள். இந்த வழக்கில் 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இன்னும் அவரது சாவில் மர்மம் நீடிக்கிறது. இந்த நிலையில் கலாபவன் மணி வாழ்க்கையை சினிமா படமாக எடுத்து முடித்துள்ளனர். விரைவில் இது திரைக்கு வருகிறது.

இந்த படத்தை வினயன் டைரக்டு செய்துள்ளார். படத்துக்கு சாலக்குடிகாரன் சங்கதி என்று பெயர் வைத்துள்ளனர். இதில் கலபாவன் மணி வேடத்தில் ராஜாமணி என்பவர் நடித்துள்ளார். இவர் கேரளாவில் பலகுரலில் பேசும் கலைஞராக இருக்கிறார். தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஹனிரோசும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

Next Story