சினிமா செய்திகள்

சர்ச்சை கருத்தால் கஸ்தூரியை விமர்சித்த ரசிகர்கள் + "||" + Fans who criticized Kasturi for the controversy

சர்ச்சை கருத்தால் கஸ்தூரியை விமர்சித்த ரசிகர்கள்

சர்ச்சை கருத்தால் கஸ்தூரியை விமர்சித்த ரசிகர்கள்
நடிகை கஸ்தூரி சமூக அரசியல் வி‌ஷயங்கள் குறித்து டுவிட்டரில் துணிச்சலாக பேசி வருகிறார். ரசிகர்களுடன் விவாதங்களிலும் ஈடுபடுகிறார்.
சமீபத்தில் பா.ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா போலீஸ் அதிகாரிகளை குறை சொன்னதை கண்டித்தார். இப்போது சர்ச்சை கருத்தை பதிவிட்டு ரசிகர்கள் எதிர்ப்பில் சிக்கி உள்ளார்.

கமல்ஹாசன் டெலிவி‌ஷனில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த அவர், ‘‘அத்தி பூத்ததுபோல் இன்றைக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தேன். விஜயலட்சுமி, யாஷிகா, ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி மற்றும் பாலாஜி. ஐந்து பெண்களுக்கு நடுவில் பாலாஜி மட்டும். கண்டிப்பாக பஞ்ச பாண்டவிகளுக்கு மத்தியில் சிக்கிய ஒரு ஆம்பளைக்குத்தான் நல்ல சான்ஸ்’’ என்று பதிவிட்டு இருந்தார்.


 இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ‘‘ஒரு ஆம்பளையாக இருந்தாலும் கவுரவமாக நடந்து கொள்கிறார். நீங்கள் ஏன் இப்படி தவறாக சிந்திக்கிறீர்கள்’’ என்று ஒருவர் கஸ்தூரியை கண்டித்துள்ளார். ‘‘இதுவே ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்து ஒரு நடிகர் இப்படி சொல்லி இருந்தால் இந்த நேரம் மாதர் சங்கம் எதிர்த்து இருக்கும்.

ஆம்பளைங்க புத்தி இவ்வளவு வக்கிரமாக இருக்கிறது என்று நீங்களே சொல்லி இருப்பீர்கள். ஆண்களுக்கு ஒரு சட்டம் பெண்களுக்கு ஒரு சட்டமா? வேண்டும் சம உரிமை ஆண்களுக்கு’’ என்று இன்னொருவர் பதிவிட்டு உள்ளார். இப்படி கஸ்தூரி கருத்து சமூக வலைத்தளத்தில் கடுமையான விவாதமாக மாறி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கூட்டணி பலத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் சேலத்தில் நடிகை கஸ்தூரி பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கூட்டணி பலத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என சேலத்தில் நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.
2. ஜெயலலிதா உணவுக்கு ரூ.1 கோடியா? நடிகை கஸ்தூரி விமர்சனம்
ஜெயலலிதா உணவுக்கு ரூ.1 கோடியா? என்று நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
3. சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களுடன் மோதிய கஸ்தூரி
நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளத்தில் அரசியல் சமூக பிரச்சினைகள் குறித்து அடிக்கடி கருத்துகள் பதிவிட்டு வருகிறார்.
4. ‘‘செருப்பால் அடித்தேன்’’ நடிகை கஸ்தூரியின் பாலியல் தொல்லை அனுபவம்
நடிகை கஸ்தூரியும் பாலியல் தொல்லையில் சிக்கியதாக கூறியுள்ளார்.
5. டுவிட்டரில் அவதூறு : நடிகை கஸ்தூரி ஆவேசம்
நடிகை கஸ்தூரி சமூக, அரசியல் சம்பந்தமான வி‌ஷயங்களை டுவிட்டரில் துணிச்சலாக பேசி எப்போதும் பரபரப்பாக இருக்கிறார். இதனால் அவருக்கு விமர்சனங்களும் வருகின்றன.