சினிமா செய்திகள்

‘த அயன் லேடி’ என்று பெயர் சூட்டப்பட்டது : ஜெயலலிதா வேடத்துக்கு நித்யா மேனன் தேர்வு + "||" + 'The Iron Lady' was named: Nithya Menon selected for Jayalalithaa's role

‘த அயன் லேடி’ என்று பெயர் சூட்டப்பட்டது : ஜெயலலிதா வேடத்துக்கு நித்யா மேனன் தேர்வு

‘த அயன் லேடி’ என்று பெயர் சூட்டப்பட்டது : ஜெயலலிதா வேடத்துக்கு நித்யா மேனன் தேர்வு
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை பிரியதர்ஷினி டைரக்டு செய்கிறார்.
பிரியதர்ஷினி டைரக்டர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தற்போது வரலட்சுமி நடிக்கும் ‘சக்தி’ படத்தை இயக்கி வருகிறார். ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் அவரது வேடத்துக்கு நடிகை தேர்வு நடந்தது. பல நடிகைகளை பரிசீலித்தனர்.


இறுதியில் ஜெயலலிதாவாக நடிக்க நித்யா மேனன் தேர்வாகி இருக்கிறார். இவர் தமிழில் விஜய் ஜோடியாக மெர்சல், சூர்யாவுடன் 24, விக்ரமுடன் இருமுகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மனி, சேரனின் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படங்களிலும் நடித்துள்ளார். நித்யா மேனனை தேர்வு செய்தது குறித்து டைரக்டர் பிரியதர்ஷினி கூறியதாவது:–

ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்துக்கு ‘த அயன் லேடி’ என்று பெயர் வைத்துள்ளோம். ஜெயலலிதா வேடத்தில் நடிக்க அவரது குணநலன்களுடன் ஒத்துப்போகிற நடிகையை தேடினோம். நித்யாமேனன் பொருத்தமாக இருப்பார் என்று அவரை அணுகி கதை சொன்னோம். திரைக்கதை அவருக்கு பிடித்துப்போய் நடிக்க சம்மதித்து உள்ளார்.

சசிகலா வேடத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமாரிடம் பேசி வருகிறோம். இதர நடிகர்–நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. பிப்ரவரி மாதம் 24–ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாளில் படப்பிடிப்பை தொடங்குகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதா வாழ்க்கையை இயக்குனர்கள் பாரதிராஜா, ஏ.எல்.விஜய் ஆகியோரும் படமாக்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தன்னிடம் அனுமதி பெறாமல் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க கூடாது என்று அவரது அண்ணன் மகன் தீபக் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தொண்டர்களின் விருப்பம் காரணமாக தேர்தலில் போட்டியிட ஜெ. தீபா முடிவு
தொண்டர்களின் விருப்பம் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
2. ஆரணியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலைகள் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
ஆரணியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலைகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
3. திருவள்ளூர் மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
திருவள்ளூர் மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
4. காஞ்சீபுரம், மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
காஞ்சீபுரம், மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
5. ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர், துணை முதல்வர் மரியாதை
ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தினமான இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர், துணை முதல்வர் மரியாதை செலுத்தினர்.