சினிமா செய்திகள்

தனிமையில் வசிக்கிறார் : நடிகை கனகா என்ன ஆனார்? + "||" + Lonely lives: What is the actress Kanaka?

தனிமையில் வசிக்கிறார் : நடிகை கனகா என்ன ஆனார்?

தனிமையில் வசிக்கிறார் :  நடிகை கனகா என்ன ஆனார்?
“மாங்குயிலே பூங்குயிலே...சேதி ஒண்ணு கேளு...உன்னை மாலையிட தேடி வரும் நாளு இந்த நாளு...” என்ற ‘கரகாட்டக்காரன்’ பட பாடலையும், அந்த படத்தில் நடித்த கனகாவையும் தமிழ் பட ரசிகர்-ரசிகைகள் அத்தனை எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.
கனகாவின் நிலை, இப்போது மர்மமாக இருக்கிறது.

கனகா, பழைய கதாநாயகி தேவிகாவின் ஒரே மகள். இவர், சிறு குழந்தையாக இருந்த போதே அப்பா டைரக்டர் தேவதாஸ், அம்மா தேவிகாவை விட்டு பிரிந்து விட்டார். அந்த வருத்தமும், கோபமும் அப்பா தேவதாஸ் மீது கனகாவுக்கு எப்போதுமே இருந்து வந்தது. அதனால், அம்மா தேவிகாவின் மறைவுக்கு பிறகும் கனகா தன் தந்தையிடம் அடைக்கலமாகவில்லை. அவரை, இவர் தன் வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டதும் இல்லை.


‘கரகாட்டக்காரன்’ படத்தை தொடர்ந்து கனகா தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்தார். 12 வருடங்கள் சினிமாவில் நடித்து வந்த அவர், அதன்பிறகு நடிக்கவில்லை. ‘முத்துகுமார்’ என்ற என்ஜினீயரை அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், முத்துகுமார் யார் என்றே எனக்கு தெரியாது என்று கனகா கூறினார்.

தேவிகா பிரபல கதாநாயகியாக ஏராளமான படங்களில் நடித்து சம்பாதித்த சொத்துகளுக்கு எல்லாம் ஒரே வாரிசு, கனகாதான். தனது தாயார் தேவிகா சம்பாதித்து வாங்கிய ஒரு பழைய பங்களாவில்தான் அவர் வசித்து வருகிறார். தன்னிடமுள்ள சொத்துக்களை யாராவது பறித்து விடுவார்களோ என்ற பயம் அவரின் அடிமனதில், மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதனால்தான் அவர் யாருடனும் பேசிப்பழகுவது இல்லை என்றும் பழைய நண்பர்கள் கூறுகிறார்கள்.

அவர், கடந்த சில வருடங்களாக வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தனிமையில் வசித்து வருகிறார். பெரும்பாலும் அவர் வெளியே வருவதில்லை. சமீபத்தில் நடந்த ஒரு சினிமா சங்க தேர்தலில் அவர் கலந்து கொண்டு ஓட்டுப்போட்டதாக, அவருடன் நடித்த ஒரு பிரபல கதாநாயகன் கூறினார். “அதன் பிறகு கனகாவை நான் பார்க்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

பூட்டிய வீட்டுக்குள் வருடக்கணக்கில் அவர் வசித்து வருவது, அவரை பற்றிய மர்மங்களை மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. கனகா வெளியே வருவாரா, மீண்டும் அவர் சினிமாவில் நடிப்பாரா? என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.