சினிமா செய்திகள்

மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு + "||" + Vijay is the best international actor for Mersal movie

மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு

மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு
மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக லண்டனை சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்பு அறிவித்துள்ளது. #IARAAwards #BestInternationalActorVijay
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகமெங்கும்  கடந்த வருடம் வெளியானது. 

விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். விவேக் வரிகளில் இடம்பெற்ற `ஆளப்போறான் தமிழன்' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து பல்வேறு சாதனைகளையும் படைத்தது. உலக அளவில் இந்த படம் நல்ல வசூல் பார்த்தது.

மேலும் மெர்சல் படம் சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. லண்டனில் நடைபெற இருந்த திரைப்பட விழாவில் ஐரா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகர்களுடன், மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் பெயரும் இடம்பெற்று இருந்தது.

இந்நிலையில் லண்டனை சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்பு, மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய்யை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...