சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார் குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:- குருவியார். “தினத்தந்தி”, சென்னை-600007
குருவியாரே, நயன்தாராவை ஜோதிகா மனம் திறந்து பாராட்டியிருக்கிறாரே...? (வி.கணபதிராஜ், சென்னை–1)

ஆரோக்கியமான வி‌ஷயம். கதாநாயகிகளுக்குள் போட்டி இருக்கலாம்...பொறாமை இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக ஜோதிகா, ‘பிள்ளையார் சுழி’ போட்டு இருக்கிறார். இந்த பண்பாடு மற்ற நடிகைகளுக்கு இடையேயும் தொடரட்டும்!

***

உடன் நடிக்கும் கதாநாயகிகளுக்கு உதவுவதில், அஜித்குமார் அளவுக்கு வேறு யாரும் இல்லை என்கிறார்களே? (பி.வி.ரவீந்திரன், பெரியபாளையம்)

கதாநாயகிகளுக்கு மட்டுமல்ல...தனது படத்தில் பணிபுரியும் படக்குழுவினர் அனைவருக்கும் அஜித் உதவி வருவதாக பேசப்படுகிறது!

***

குருவியாரே, பி.வாசு டைரக்டு செய்த படங்களில் 175 நாட்களுக்கு மேல் ஓடி, சாதனை புரிந்த படங்கள் என்னென்ன? (ஆர்.கோடீஸ்வரன், போரூர்)

சந்திரமுகி, சின்ன தம்பி, வால்டர் வெற்றிவேல்!

***

‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் அறிமுகமான சுகன்யா, இப்போது என்ன செய்கிறார்? (வி.சுப்பிரமணியம், பி.கொமாரபாளையம்)

வெளிநாடுகளில், கலைநிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். சுகன்யா கலை நிகழ்ச்சி என்றால் வெளிநாடுகளில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் கூடுகிறதாம்!

***

குருவியாரே, ‘கரகாட்டக்காரன்’ புகழ் கனகா பற்றி எந்த தகவலும் வெளிவருவதில்லையே...அவர் என்ன ஆனார்? (சோ.முத்துராம், கோவை)

கனகா, உள்பக்கமாக பூட்டிய வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார். எப்போதாவது அவர் வெளியே வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு தேர்தலில் அவர், ‘பெப்சி’ யூனியனுக்கு வந்து 2 மணி நேரம் காத்திருந்து ஓட்டு போட்டாராம்!

***

அனுஷ்கா எப்படியிருக்கிறார்? (எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு)

முன்பை விட, 2 சுற்று குண்டாகி இருக்கிறார்!

***

குருவியாரே, நயன்தாராவும், கீர்த்தி சுரேசும் அரசியலுக்கு வந்தால், இரண்டு பேரில் யாருக்கு மக்களிடத்தில் ஆதரவு கிடைக்கும்? (ஏ.ஸ்டீபன் பால்ராஜ், சென்னை)

யாரிடம் அழகும், கவர்ச்சியும் அதிகமாக இருக்கிறதோ, அவருக்கு ஆதரவு கிடைக்கும்!

***

பல வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ படத்தில் நடித்தவர்கள் யார்–யார்? இயக்கியவர் யார்? (கே.ஹரிகரன், கொழிஞ்சாம்பாறை)

‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ படத்தில், ஜெய்சங்கர், ராஜேஷ், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்து இருந்தார்கள். ஸ்ரீதர்ராஜன் டைரக்டு செய்திருந்தார்!

***

குருவியாரே, தமிழ் திரையுலகின் பொற்காலம் என்று எந்த நடிகர்களின் காலத்தை சொல்லலாம்? (எஸ்.விவேகானந்தன், கடலூர்)

‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர்–‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் ஆகியோரின் காலத்தை ‘தமிழ் திரையுலகின் பொற்காலம்’ என்று கூறலாம்!

***

‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தை தயாரித்த விஜய் சேதுபதி, அடுத்து தயாரிக்கும் படம் எது? (ஏ.ஜி.முகமது தவ்பீக், மேலப்பாளையம்)

அடுத்த படம் தயாரிப்பது பற்றி விஜய் சேதுபதி இன்னும் முடிவு செய்யவில்லை! அவர் நடித்த ‘96’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்த படம் வெளியானதும் அடுத்த படம் பற்றி முடிவு செய்வார்!

***

குருவியாரே, ராஜேஷ்கன்னா–‌ஷர்மிளா தாகூர் நடித்த ‘ஆராதனா’ என்ற இந்தி படம் தமிழில், ‘ரீமேக்’ செய்யப்பட்டதா, இல்லையா? (கே.சி.நடேசன், நெய்வேலி)

‘ஆராதனா’ படம், ‘சிவகாமியின் செல்வன்’ என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்பட்டது. அந்த படத்தில், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன்–வாணிஸ்ரீ, லதா ஆகியோர் நடித்து இருந்தார்கள்!

***

ஜெயம் ரவி நடிக்கும் ‘அடங்க மறு,’ அவருக்கு எத்தனையாவது படம்? (கே.டி.முத்து சுப்பையா, திண்டுக்கல்)

‘அடங்க மறு,’ ஜெயம் ரவிக்கு 23–வது படம்!

***

குருவியாரே, சமந்தா மிக உற்சாகமாக காணப்படுகிறாரே...என்ன வி‌ஷயம்? (எஸ்.வீரபாண்டியன், மதுரை)

அவர் நடித்த படங்கள் அனைத்தும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. அவருக்கு திருமணம் ஆன பிறகும் தமிழ்–தெலுங்கு பட உலகின் பிரபல கதாநாயகர்கள், சமந்தாவை ஒதுக்கவில்லை. ஜோடியாக சேர்த்துக் கொள்கிறார்கள். உற்சாகத்துக்கு காரணம், இதுதான்!

***

பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகிய மூன்று பேரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க, அந்த படத்தை பாரதிராஜா இயக்கினால் எப்படியிருக்கும்? (கோ.ஜெகநாதன், சேலம்)

படம், உடனே வியாபாரமாகி விடும். படத்தின் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் லாபம் அடைவார்கள்!

***

குருவியாரே, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் சொந்த ஊர் எது? (டி.ராஜன், கோச்சடை)

சிவகார்த்திகேயனின் சொந்த ஊர், திருச்சி!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த படங்களில், மிக அதிக நாட்கள் ஓடிய 2 படங்களை கூறுங்களேன்...? (பெ.மோகன், தூத்துக்குடி)

‘பட்டிக்காடா பட்டணமா,’ ‘எங்கிருந்தோ வந்தாள்!’

***

குருவியாரே, ‘என்.ஜி.கே.’ படத்தை அடுத்து சூர்யா யாருடைய டைரக்‌ஷனில் நடிக்கிறார்? (கே.ரிஷி, துவரங்குறிச்சி)

‘என்.ஜி.கே’ படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் டைரக்‌ஷனில், சூர்யா நடிக்கிறார்!

***

பிரிவதும், சந்திப்பதுமாக இருக்கும் ஜெய்–அஞ்சலி ஜோடி, இப்போது எந்த நிலையில் இருக்கிறார்கள்? (எம்.குரு, புதுச்சேரி)

ஜெய், வேறு கதாநாயகியுடனும், அஞ்சலி, வேறு கதாநாயகனுடனும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்!

***

தொடர்புடைய செய்திகள்

1. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
2. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
3. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007.
4. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
5. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007