சினிமா செய்திகள்

விளையாட்டில் விக்னேஷ் சிவனை வீழ்த்திய நயன்தாரா!! + "||" + nayanthara won packman smash game vignesh sivan

விளையாட்டில் விக்னேஷ் சிவனை வீழ்த்திய நயன்தாரா!!

விளையாட்டில் விக்னேஷ் சிவனை வீழ்த்திய நயன்தாரா!!
பேக்மேன் ஸ்மாஷ் என்ற விளையாட்டில் நயன்தாராவிடம் விக்னேஷ் சிவன் தோற்றுப்போனதாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சென்னை,

நயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பில் காதல் வயப்பட்டு நெருங்கி பழகி வருகிறார்கள். வெளிநாடுகளிலும் ஜோடியாக சுற்றுகிறார்கள். இருவரும் நெருக்கமாக எடுத்த படங்களை சமூக வலைத்தளங்களிலும் வெளியிடுகிறார்கள். இவர்களுக்கு ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டது என்று சிலரும், திருமணம் செய்து கொள்ளாமலேயே சென்னை எழும்பூரில் நயன்தாரா புதிதாக வாங்கி உள்ள வீட்டில் சேர்ந்து வாழ்கிறார்கள் என்று சிலரும் பேசி வருகின்றனர்.

காதல் பற்றி இதுவரை அவர்கள் வாய் திறக்கவில்லை. மற்றவர்கள் பேசுவதையும் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் ஜோடியாக சுற்றும் படங்களை மட்டும் தவறாமல் வெளியிட்டு அதிர்வை உருவாக்கி வருகிறார்கள். விநாயகர் சதுர்த்தியன்று சேர்ந்து எடுத்த படத்தை வெளியிட்டனர். அதை பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக இருக்கிறது. விரைவில் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கருத்து பதிவிட்டார்கள்.

சமீபத்தில் இருவரும் ஜோடியாக அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று வழிபட்ட படங்களை விக்னேஷ் சிவன் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்தநிலையில்,   சமீபத்தில் தனது 34-வது பிறந்தநாளைக் கொண்டாடிய விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் வேகேஷன் சென்றுள்ளார். அப்போது இருவரும் பேக்மேன் ஸ்மாஷ் என்ற விளையாட்டை விளையாடியுள்ளனர். இந்த வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 1050 புள்ளிகளை நயன்தாரா பெற்றுள்ளார். 700 புள்ளிகளை பெற்ற விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் தோல்வி அடைந்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. நயன்தாரா சம்பளம் ரூ.6 கோடியாக உயர்ந்தது!
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் முதன்மை நாயகியான நயன்தாரா, படத்துக்கு படம் தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகிறார்.
2. நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு
நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோரது திருமணம் எப்போது, என ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
3. சிரஞ்சீவி படத்தில் ராணி வேடத்தில் நயன்தாரா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் நடிக்கிறார். இப்போது 7 படங்கள் அவர் கைவசம் உள்ளன.
4. நயன்தாராவுக்கு ஆலோசனை!
நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் அடுத்த கட்டம் பற்றி ஆலோசனை சொல்கிறார்களாம்.
5. ‘‘நயன்தாராவை பார்த்து வியக்கிறேன்’’–ஜோதிகா
நயன்தாரா தமிழ் பட உலகில் நம்பர்–1 இடத்தில் இருக்கிறார். முன்னணி கதாநாயகிகளாலும் அவரது மார்க்கெட்டை சரிக்க முடியவில்லை.