சினிமா செய்திகள்

தீபிகா படுகோனே திருமணம் தள்ளிவைப்பு + "||" + Deepika Padukone marriage postponed

தீபிகா படுகோனே திருமணம் தள்ளிவைப்பு

தீபிகா படுகோனே திருமணம் தள்ளிவைப்பு
‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
ராணி பத்மினியாக நடித்த பத்மாவத் படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்து வசூல் குவித்தது. அதோடு படத்துக்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டங்களும் நடந்தன.

தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. தீபிகா படுகோனேவும் பிரபல இந்தி நடிகர் ரன்வீர்சிங்கும் 2 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். வெளிநாடுகளுக்கும் ஜோடியாக சென்று வருகிறார்கள்.  இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் இந்தி பட உலகில் பேசினர்.


வருகிற நவம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக நெருங்கிய உறவினர்கள் தெரிவித்தனர். திருமண ஏற்பாடுகளும் நடந்து வந்தன. இத்தாலியில் திருமணத்தை முடித்து விட்டு மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தனர். திருமணம் முடிந்ததும் தங்குவதற்காக மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு தளங்கள் உள்ள சொகுசு வீட்டை விலைக்கு வாங்கி உள்ளனர்.

இந்த நிலையில் தீபிகா படுகோனேவும் ரன்வீர்சிங்கும் தங்கள் திருமணத்தை திடீரென்று தள்ளிவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் படங்களில் தீவிரமாக நடித்து வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று கூறுகின்றனர். அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. திராவகம் வீசப்பட்ட பெண்ணின் கதையில் தீபிகா படுகோனே
டெல்லியில் 2005–ம் ஆண்டு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த லட்சுமி அகர்வால் என்ற பெண் மீது திராவகம் வீசப்பட்டது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2. மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமே‌ஷன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
3. நவம்பர் 20–ந் தேதி தீபிகா படுகோனேவுக்கு திருமணம்?
தீபிகா படுகோனே-இந்தி நடிகர் ரன்வீர் சிங் திருமணம் நவம்பர் 20–ந் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. பட வாய்ப்புக்காக எந்த சமரசமும் செய்யாதீர்கள் -தீபிகா படுகோனே சொல்கிறார்
பட வாய்ப்புக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள் என நடிகை தீபிகா படுகோனே கூறி உள்ளார்.
5. இத்தாலியில் நடக்கிறது தீபிகா படுகோனே - ரன்வீர்சிங் திருமணம்
தீபிகா படுகோனே இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.