சினிமா செய்திகள்

கார் விபத்தில் 3 நடிகர்கள் காயம் + "||" + Car crash 3 actors hurt

கார் விபத்தில் 3 நடிகர்கள் காயம்

கார் விபத்தில் 3 நடிகர்கள் காயம்
பெங்களூருவில் நடந்த கார் விபத்தில் 3 நடிகர்கள் காயம் அடைந்தனர்.
பிரபல கன்னட நடிகர் தர்‌ஷன், பெங்களூருவில் இருந்து மைசூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக காரில் சென்றார். அதே காரில் கன்னட மூத்த நடிகர் தேவராஜ் மற்றும் அவரது மகனும், நடிகருமான பிரஜ்வல் ஆகியோரும் சென்றனர். நிகழ்ச்சியை முடித்துவிட்டு அதே காரில் அவர்கள் பெங்களூரு திரும்பினர். 

ஹின்கல் ரிங் ரோடு அருகே கார் சென்றபோது திடீர் என்று டயர் பஞ்சரானது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த தர்‌ஷன், தேவராஜ், பிரஜ்வல் மற்றும் டிரைவர் ஆகிய 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 

காயமடைந்த 4 பேரில் 3 பேருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். தர்‌ஷனுக்கு கை எலும்பு முறிந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தேவராஜுக்கு நெஞ்சில் அடிபட்டதால் இருதய நிபுணர்குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தர்‌ஷன் காயம் அடைந்த தகவல் அறிந்ததும் அவரது தாய் மீனா, மனைவி விஜயலட்சுமி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து பார்த்தனர். தர்‌ஷன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...