சினிமா செய்திகள்

தமிழில் வரும் அமிதாப்பச்சன் படம் + "||" + Amitabh Bachchan will film in Tamil

தமிழில் வரும் அமிதாப்பச்சன் படம்

தமிழில் வரும் அமிதாப்பச்சன் படம்
அமிதாப்பச்சன் நடிக்கும் ‘தக்ஸ் ஆப் இன்டோஸ்தான்’ படம் தமிழிலும் வெளியாகிறது.
அமிதாப்பச்சன் 75 வயதிலும் பொருத்தமான கதைகளை தேர்வு செய்து மற்ற இளம் கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிக்கிறார். தனுசுடன் இணைந்து ‌ஷமிதாப் படத்தில் நடித்தார். டாப்சிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய பிங்க் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வந்தார். தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவியுடன் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் நேரடி தமிழ் படத்திலும் நடிக்கிறார்.

தற்போது இந்தியில் ‘தக்ஸ் ஆப் இன்டோஸ்தான்’ என்ற சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடிக்கிறார். இதில் அமிதாப்பச்சன் ராஜா வேடத்தில் வருகிறார். அவரது முதல் தோற்றம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் முதல் முதலாக அமீர்கானும், அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிக்கிறார். 

கதாநாயகிகளாக கத்ரினா கைப், பாத்திமா சனா சேக் ஆகியோர் வருகிறார்கள். விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா டைரக்டு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. படத்தை நவம்பர் மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள். ‘தக்ஸ் ஆப் இன்டோஸ்தான்’ படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...