சினிமா செய்திகள்

நடிகை ரம்பாவுக்கு ஆண் குழந்தை + "||" + actress Ramba gave birth to baby boy

நடிகை ரம்பாவுக்கு ஆண் குழந்தை

நடிகை ரம்பாவுக்கு ஆண் குழந்தை
நடிகை ரம்பாவுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 3–வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா. உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, சுந்தர புரு‌ஷன், அருணாசலம், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்துள்ளார். ரம்பாவுக்கும் கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரகுமார் பத்மநாதனுக்கும் 2010–ல் திருமணம் நடந்தது. 

இவர்களுக்கு 7 வயதில் லாண்யா என்ற மகளும், 3 வயதில் சாஷா என்ற மகளும் உள்ளனர். கணவருடன் ரம்பாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் சூழ்நிலைகள் ஏற்பட்டன. உறவினர்களும் நண்பர்களும் சமரசம் செய்து மீண்டும் சேர்த்து வைத்தார்கள். சகோதரர் மனைவி, குடும்பத்தகராறில் போலீசில் ரம்பாவுக்கு எதிராக புகார் அளித்த சர்ச்சைகளும் ஏற்பட்டன. இந்த நிலையில் ரம்பா மீண்டும் கர்ப்பமாகி இருந்தார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நடந்த படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவின. கனடாவில் இருக்கும் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு ரம்பாவுக்கு 3–வதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை அவரது கணவர் இந்திரகுமார் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். ரம்பாவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.