சினிமா செய்திகள்

தேவர் மகன்–2 படத்தில் நடிக்க கமல்ஹாசன் முடிவு? + "||" + Kamal Haasan to act in the Devarmagan2

தேவர் மகன்–2 படத்தில் நடிக்க கமல்ஹாசன் முடிவு?

தேவர் மகன்–2 படத்தில் நடிக்க கமல்ஹாசன் முடிவு?
நடிகர் கமல்ஹாசனும் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழில் இப்போது 2–ம் பாகம் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சூர்யாவின் சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளன. விக்ரமின் சாமி படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் திரைக்கு வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமும் வந்தது. ரஜினிகாந்த் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் நடித்துள்ளார். இது நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது. 

விஷால் சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். சதுரங்க வேட்டை இரண்டாம் பாகமும் தயாராகி உள்ளது. நடிகர் கமல்ஹாசனும் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து இயக்குவது பற்றி ஆலோசிப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதன் முதல் பாகம் 1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி நடித்து இருந்தனர்.

இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன. இதில் போற்றி பாடடி பெண்ணே, வானம் தொட்டு போனா, அட புதியது பிறந்தது, இஞ்சி இடுப்பழகி ஆகிய இனிமையான பாடல்களும் இடம்பெற்று இருந்தன. கமல்ஹாசன் தற்போது டெலிவி‌ஷனில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இரண்டு வாரத்தில் இது முடிய இருக்கிறது. 

அதன்பிறகு ‌ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்–2 படத்தில் நடிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்க உள்ளது. இந்த படத்தோடு தேவர் மகன்–2 படப்பிடிப்பையும் தொடங்குவார் என்றும் தேர்தலுக்கு முன்பு இரண்டு படங்களையும் திரைக்கு கொண்டு வருவார் என்றும் பேசப்படுகிறது.