சினிமா செய்திகள்

பொங்கல் பண்டிகையில் ரஜினி–அஜித் படங்கள் மோதல் + "||" + Pongal festival Rajini-Ajith films conflict

பொங்கல் பண்டிகையில் ரஜினி–அஜித் படங்கள் மோதல்

பொங்கல் பண்டிகையில்
ரஜினி–அஜித் படங்கள் மோதல்
ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட மற்றும் அஜித்குமாரின் விஸ்வாசம் படங்களை பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.
இரு படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடக்கிறது. விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு வெளியிட முதலில் திட்டமிட்டனர். படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால் பொங்கலுக்கு தள்ளிப்போகிறது. 

ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 நவம்பரில் திரைக்கு வருகிறது. பேட்ட, விஸ்வாசம் படங்கள் ஒன்றாக மோத இருப்பதால் ரஜினி, அஜித் ரசிகர்களால் பொங்கல் பண்டிகைகளை கட்டும் என்கின்றனர். பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, திரிஷா, சிம்ரன் ஆகியோர் நடிக்கின்றனர். 

கார்த்தி சுப்புராஜ் இயக்குகிறார். இது அதிரடி படமாக உருவாகிறது. ரஜினிகாந்த் கல்லூரி விடுதி வார்டனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இப்போது அவருக்கு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி வேடம் என்கின்றனர். இறுதிகட்ட படப்பிடிப்பு லக்னோவில் தற்போது நடந்து வருகிறது. அடுத்தமாதம் இறுதியில் படப்பிடிப்பு முடிகிறது. 

விஸ்வாசம் படத்தில் அஜித்குமார் இரு வேடங்களில் நடிக்கிறார். ஒரு கதாபாத்திரத்துக்கு தூக்கு துரை என்று பெயர் வைத்து இருப்பதாக தகவல். தாதா கதையம்சம் உள்ள படம். இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். சிவா இயக்குகிறார். அஜித்குமாரின் முதல் தோற்ற படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் ‘‘எத்தன உயரம் இமயமல. அதில் இன்னொரு சிகரம் எங்க தல’’ என்ற பாடல் இடம்பெறுகிறது. இது படத்தின் அறிமுக பாடலாக இருக்கலாம் என்று தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பொங்கலுக்கு அஜித்குமார் படம்
பொங்கலுக்கு அஜித்குமார் படம் வெளியாக உள்ளது.
2. கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?
ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, குருசோமசுந்தரம், நவாசுதீன் சித்திக், திரிஷா, சிம்ரன் என்று நிறைய நட்சத்திர பட்டாளம் நடிக்கிறார்கள்.
3. ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள 2.0 திரைப்படத்தின் உருவாக்க காட்சிகள் வெளியீடு..
நடிகர் ரஜினிகாந்த் - இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ஸ்நீக் பீக் எனப்படும் பிரத்யேக காட்சிகள் இன்று வெளியிடபட்டது.
4. பிரபல வில்லன் நடிகர் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு
ரஜினியின் 'காலா' படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பிரபல நடிகை குற்றம்சாட்டியுள்ளார்.
5. ‘கட்சிக்கு பெயர் வைக்காமலேயே மிகைப்படுத்துகிறார்’ ரஜினிகாந்த் மீது டி.ராஜேந்தர் மறைமுக தாக்கு
கட்சிக்கு பெயர் வைக்காமலேயே மிகைப்படுத்துகிறார் என்று ரஜினிகாந்தை டி.ராஜேந்தர் மறைமுகமாக தாக்கியுள்ளார்.