சினிமா செய்திகள்

7 பாலிவுட் நட்சத்திரங்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் + "||" + 2 couples, 2 Khans and KJo: Aamir, SRK, Ranbir-Alia, Deepika-Ranveer in one frame

7 பாலிவுட் நட்சத்திரங்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம்

7 பாலிவுட் நட்சத்திரங்கள் ஒன்றாக  எடுத்துக் கொண்ட புகைப்படம்
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமீர்கான், ஷாரூக்கான், ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி உள்ளது.
மும்பை,

அமீர்கான், ஷாரூக்கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், அலியா பட், தீபிகா படுகோனே மற்றும் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் ஆகிய 7 பேரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்தப் புகைப்படத்தை கரண் ஜோஹர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர்கள் ஒன்று கூடியது எதற்காக என்று பல்வேறு யூகங்கள் கூறப்படும் நிலையில் அமீர் கான் நடித்துள்ள தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தின் டிரெய்லரை பார்க்க விடுத்த அழைப்பை ஏற்று அனைவரும் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.