சினிமா செய்திகள்

இன்னொரு நடிகர் மீது தனுஸ்ரீதத்தா புகார் + "||" + Tanushree Dutta complaint against another actor

இன்னொரு நடிகர் மீது தனுஸ்ரீதத்தா புகார்

இன்னொரு நடிகர் மீது தனுஸ்ரீதத்தா புகார்
இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்த தனுஸ்ரீ தத்தா, இன்னொரு நடிகர் மீதும் புகார் கூறி இருக்கிறார்.
தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தனுஸ்ரீதத்தா. இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசும்போது இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

அவர் கூறும்போது, ‘‘2008–ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற படத்தில் நடித்தபோது நானா படேகர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதை வெளியே சொல்லக்கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் என்னை மிரட்டினார்கள். என் குடும்பத்தினருடன் சென்றபோது தாக்கினார்கள். 

நானா படேகர் பெண்களை மதிப்பது இல்லை. சில நடிகைகளை அடித்து இருக்கிறார். என்னைப்போல் பல புதுமுக நடிகைகள் இதுபோன்ற தொல்லைகளை சந்தித்துக்கொண்டு பொறுமையாக இருக்கிறார்கள்’’ என்றார். ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் தங்கள் படங்களில் நானா படேகரை நடிக்க வைக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இதனை ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியவரும், தமிழில் ஜீவாவின் ரவுத்திரம் படத்தில் நடித்தவருமான கணேஷ் ஆச்சாரியா மறுத்துள்ளார். அவருக்கு பதில் அளித்து தனுஸ்ரீதத்தா கூறும்போது, ‘கணேஷ் ஆச்சாரியா பொய் பேசக்கூடியவர். அவருக்கு இரண்டு முகம் இருக்கிறது. பத்து வருடத்துக்கு முன்பு எனக்கு நடந்த பாலியல் தொல்லை சம்பவத்தில் நானா படேகருக்கு உடந்தையாக இருந்தார்’ என்றும் கூறியுள்ளார்.