பாலியல் புகாரில் சிக்கிய ஹாலிவுட் நடிகருக்கு 10 ஆண்டு சிறை


பாலியல் புகாரில் சிக்கிய ஹாலிவுட் நடிகருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 27 Sep 2018 10:00 PM GMT (Updated: 27 Sep 2018 5:14 PM GMT)

ஹாலிவுட் நடிகர் பில் காஸ்பி பாலியல் புகாரில் சிக்கி சிறைதண்டனை பெற்று இருக்கிறார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் பில் காஸ்பி. ‘தி ஹங்ரி ஐ ரீயூனியன்,’ ‘பேட் ஆல்பர்ட்,’ ‘கோஸ்ட் டாட்’ ஆகிய படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தும் பேசப்பட்டார். இவருக்கு 81 வயது ஆகிறது. இந்த நிலையில் பில் காஸ்பி பாலியல் புகாரில் சிக்கி சிறைதண்டனை பெற்று இருக்கிறார். 

2004–ம் ஆண்டு பிலெடெல்பியாவில் உள்ள அவரது வீட்டில் டெம்பிள் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஆண்ட்ரியா காஸ்டான்ட் என்ற பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இது குறித்து கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் நடிகர் பில் காஸ்பிக்கு கோர்ட்டு 10 ஆண்டுகள்வரை சிறை தண்டனையும், 25 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. பில் காஸ்பி ஒரு காம கொடுரன் என்றும் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. வாழ்நாள் முழுவதும் மாதம்தோறும் டாக்டர்களிடம் அவர் கவுன்சிலிங் பெற வேண்டும் என்றும், அவரது பெயர் அருகில் உள்ள பள்ளி மற்றும் முக்கிய இடங்களில் பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்று இருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

Next Story