சினிமா செய்திகள்

என் உடல் எடையை விமர்சிப்பதா? –நித்யா மேனன் + "||" + Does my body criticize weight? - Nitya Menon

என் உடல் எடையை விமர்சிப்பதா? –நித்யா மேனன்

என் உடல் எடையை விமர்சிப்பதா? –நித்யா மேனன்
உடல் எடை கூடி குண்டாக இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியதையடித்து இந்த விமர்சனங்களுக்கு நித்யா மேனன் பதில் அளித்துள்ளார்.
விஜய் ஜோடியாக மெர்சல் படத்தில் நடித்தவர் நித்யா மேனன். காஞ்சனா–2, இருமுகன், 24, வெப்பம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் த அயர்ன் லேடி என்ற படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். 

நித்யா மேனன் உடல் எடை கூடி குண்டாக இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின. சமூக வலைத்தளங்களிலும் இதை குறையாக பேசி வந்தனர். பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த விமர்சனங்களுக்கு நித்யா மேனன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–

‘‘எனது உடல் எடை பற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகிறார்கள். இதற்கு நான் பதில் சொன்னாலும் சொல்லாமல் இருந்தாலும் விமர்சிப்பவர்கள் எனக்கு எதிராக பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். எனது உடல் எடை பற்றி நான் கவலைப்படுவது இல்லை. அதுபற்றி நானே கவலைப்படாதபோது மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது. அவர்கள் ஏன் விமர்சிக்க வேண்டும்.

 எனது எடையை குறைக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தால் அதற்கு ஒரு மாதம் போதும். பழைய கதாநாயகிகள் அனைவரும் குண்டாகத்தான் இருந்திருக்கிறார்கள். அதற்காக தயாரிப்பாளர்கள் படங்கள் தயாரிப்பதை நிறுத்தவா செய்தார்கள்? சினிமாவில் நடிப்புதான் முக்கியம், உடல் எடை முக்கியம் இல்லை. உடல் எடையை குறைத்தால்தான் படங்களில் நடிக்க முடியும் என்று யாராவது விரும்பினால் அந்த படங்கள் எனக்கு தேவை இல்லை.’’

இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.