சினிமா செய்திகள்

மறைந்த பிரபல ஹாலிவுட் நடிகைமர்லின் மன்றோ கார் ரூ.3½ கோடிக்கு ஏலம்? + "||" + Marilyn Monroe car auction for Rs.3½ crore

மறைந்த பிரபல ஹாலிவுட் நடிகைமர்லின் மன்றோ கார் ரூ.3½ கோடிக்கு ஏலம்?

மறைந்த பிரபல ஹாலிவுட் நடிகைமர்லின் மன்றோ கார் ரூ.3½ கோடிக்கு ஏலம்?
மறைந்த ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ பயன்படுத்திய கார் ரூ.3½ கோடிக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாலிவுட்டில் 1950–களில் புகழ் பெற்ற நடிகையாக இருந்தவர் மர்லின் மன்றோ. அவரது சொந்த வாழ்க்கை துயரமானதாக இருந்தது. இரண்டு திருமணங்கள் விவாகரத்தில் முடிந்தன. பொருள் இழப்பு, மனச்சோர்வு, கவலைகள் அவரை பிடித்து ஆட்டின. இதனால் 1962–ல் தனது 36–வது வயதில் தற்கொலை செய்து கொண்டார். 

காற்றில் மேலாடை சற்று மேலே பறப்பது போன்ற மர்லின் மன்றோ புகைப்படம் இப்போதும் உலகம் முழுவதும் வீடுகளையும் நட்சத்திர ஓட்டல்களையும் அலங்கரிப்பதை பார்க்க முடியும். மர்லின் மன்றோவின் பிளாக் போர்டு தண்டர் பேர்டு கார் ஏலத்துக்கு வருகிறது. இந்த காரை 1955 முதல் 1962–வரை அவர் பயன்படுத்தினார். 

எழுத்தாளர் ஆர்தர் மில்லரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே இந்த காரை அவரது வியாபார பங்குதாரர் மில்டன் கிரீன் என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகை பரிசாக வழங்கினார். ஆர்தர் மில்லரை அவர் திரு

மணம் செய்தபோது இந்த காரில்தான் பயணித்தார். அதன்பிறகு இதை ஹாலிவுட் இயக்குனர் லீ ஸ்ட்ராச்பெர்க் மகனின் 18–வது பிறந்தநாளுக்கு பரிசாக வழங்கினார். 

தற்போது மர்லின் மன்றோ பயன்படுத்திய இந்த காரை ஏலத்துக்கு கொண்டு வருகிறார்கள். அடுத்த நவம்பர் மாதம் ஏலம் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த கார் 5 லட்சம் அமெரிக்க டாலருக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய பண மதிப்பில் சுமார் ரூ.3 கோடியே 62 லட்சம் ஆகும்.