சினிமா செய்திகள்

திரைப்படமாகும் கேரளா வெள்ளம் + "||" + The film is a flood of Kerala

திரைப்படமாகும் கேரளா வெள்ளம்

திரைப்படமாகும் கேரளா வெள்ளம்
சமீபத்தில் கேரளாவில் அபரிமிதமாக பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும், நிலச்சரிவின் காரணமாகவும் உயிர் சேதங்களும், பொருட் சேதங்களுக்கு அதிகமாக நிகழ்ந்தன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட பலர் முன்வந்தனர். கேரள மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நிலச்சரிவில் சிக்கியவர்களையும் பத்திரமாக மீட்டதில் அந்தந்த பகுதி மீனவர்களும், துணை ராணுவ வீரர்களும் முக்கியமானவர்கள்.


இவர்களை கவுரவப்படுத்தும் விதமாக மலையாளத்தில் ஒரு படம் உருவாக இருக்கிறது. ‘2403 பீட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்க இருக்கிறார். இவர் நிவின்பாலி- நஸ்ரியா இணைந்து நடித்த ‘ஓம் சாந்தி ஓசானா’ என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர்.

2014-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தைத் தொடர்ந்து, 2016-ம் ஆண்டு ‘ஒரு முத்தாசி கதா’ என்ற படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து ஜூட் ஆண்டனி ஜோசப்பிற்கு சிறு சிறு வேடங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இதையடுத்து இயக்கத்தை நிறுத்தி வைத்திருந்த ஜூட் ஆண்டனி, தற்போது கேரளா மழை வெள்ள பாதிப்பை மையமாக வைத்து ‘2403 பீட்’ என்ற படத்தை இயக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். அதோடு படத்திற்கான போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்.