சினிமா செய்திகள்

‘பரியேறும் பெருமாள்’‘‘பெரிய அதிர்வை ஏற்படுத்திய படம்’’ + "||" + pariyerum perumal The film caused a great vibe

‘பரியேறும் பெருமாள்’‘‘பெரிய அதிர்வை ஏற்படுத்திய படம்’’

‘பரியேறும் பெருமாள்’‘‘பெரிய அதிர்வை ஏற்படுத்திய படம்’’
சமீபத்தில் திரைக்கு வந்த படங்களில் ‘பரியேறும் பெருமாள்,’ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
‘பரியேறும் பெருமாள், படத்தில் கதாநாயகனாக கதிர், கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். மாரி செல்வராஜ் டைரக்டு செய்திருக்கிறார். இது சாதி வெறியை பற்றிய படம்.  

இந்த படத்தில், ஆனந்தியின் அப்பாவாக குணச்சித்ர வேடத்தில், டைரக்டர் மாரிமுத்து நடித்து இருக்கிறார். இவர், ‘கண்ணும் கண்ணும்’ படத்தை டைரக்டு செய்தவர். ‘பரியேறும் பெருமாள்’ பற்றி அவர் கூறியதாவது:–

‘‘தமிழ்த் திரையுலகிலும், தமிழக மக்கள் மனங்களிலும் பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது ‘‘பரியேறும் பெருமாள்.’’

புரையோடிப்போன பிரச்சினையை பூமியில் நீரோட்டம் காட்டும் கருவி போல் குறியீடுகளால் உணர்த்திய இயக்குனர் சகோதரர் மாரி செல்வராஜ் மீது ரசிகர்கள் புகழ்மாரி பொழிகிறார்கள்...

பணத்தை முதலீடு செய்தல் என்பதைத் தாண்டி பிரச்சினையை முதலீடு செய்து, இந்த படத்தைத் தயாரித்திருக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு பாராட்டு மழையும், பண மழையும் மறு முதலீடாய் வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி...

படம் பார்த்து விட்டு பெரிய பாராட்டை எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் பதிவு செய்து கொண்டிருக்கும் கலையுலகப் படைப்பாளிகளுக்கும், தங்க மனம் கொண்ட தமிழக மக்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்...

பரியேறும் பெருமாள்
பாராட்டுகளில்
ஏறிக் கொண்டிருக்கும்
கிரியேறும் பெருமாள்...

காலங்கள் தாண்டி நிற்கப்போகும் இந்த கலைப்படைப்பில், கதையை நகர்த்தும் ஒரு கனமான பாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதில் மகிழ்வும், உற்சாகமும் எனக்கு...

வாய்ப்பளித்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றிகள்...’’

இவ்வாறு டைரக்டர்–நடிகர் மாரிமுத்து கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. கன்னடத்தில், ‘பரியேறும் பெருமாள்’
கதிர்-ஆனந்தி நடித்து திரைக்கு வந்த ‘பரியேறும் பெருமாள்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.