சினிமா செய்திகள்

சர்க்கார்: சிமிட்டாங்காரனை தொடர்ந்து ”ஒரு விரல் புரட்சி” மாலை 6 மணிக்கு வெளியாகிறது + "||" + The second single from Sarkar

சர்க்கார்: சிமிட்டாங்காரனை தொடர்ந்து ”ஒரு விரல் புரட்சி” மாலை 6 மணிக்கு வெளியாகிறது

சர்க்கார்: சிமிட்டாங்காரனை தொடர்ந்து ”ஒரு விரல் புரட்சி” மாலை 6 மணிக்கு வெளியாகிறது
சர்கார் படத்தில் வரும் ஒரு விரல் புரட்சி பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது.
சென்னை,

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சர்க்கார்’. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், விஜய்க்கு இரண்டாவது முறை ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘சர்க்கார்’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. 

இந்நிலையில் இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து ஒரு பாடல் மட்டும் வெளிவந்தது. சிமிட்டாங்காரன் என்ற அந்த பாடல் ரசிகர்களை அதிகம் ஈர்த்தது. 

இந்நிலையில் ஒரு விரல் புரட்சி என்கிற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று சர்கார் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வரும் விஜய் அரசியலில் பெரும் மாற்றம் செய்வது போன்று கதை அமைத்துள்ளார் முருகதாஸ்.

இந்நிலையில் ஒரு விரல் புரட்சி பாடல் படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் பேசப்படுகிறது.