சினிமா செய்திகள்

திருமணம்.. பணம்.. புகழ்.. விதியை நம்பும் தீபிகா படுகோன் + "||" + Marriage .. money .. fame .. Believe the destiny Deepika Padukone

திருமணம்.. பணம்.. புகழ்.. விதியை நம்பும் தீபிகா படுகோன்

திருமணம்.. பணம்.. புகழ்.. விதியை நம்பும் தீபிகா படுகோன்
கோச்சடையான் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனின் காதல் வாழ்க்கை இழுபறியாகவே இருந்து கொண்டிருக்கிறது.
காதலர் ரன்வீர்சிங்குக்கும் அவருக்கும்  வருகிற நவம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் என்று பரபரப்பாக பேசப்பட்டது. அவர்களது கல்யாண வாழ்க்கையை தொடங்க மும்பையில் பங்களாவும் தயாரானது. இந்த நிலையில் திருமணம் தள்ளிப்போனதாக திடீர் தகவல் வந்திருக்கும் நிலையில், அது பற்றி தீபிகா படுகோனிடம் கேட்போம்!


உங்களுக்கும்- ரன்வீர் சிங்குக்கும் எப்போது திருமணம்?

இன்னும் சிறிது காலம் காத்திருங்கள். இது பற்றிய கூடுதல் தகவல்களை அப்புறம் சொல்கிறேன்.

ஓம் சாந்தி ஓம் முதல் 11 ஆண்டுகள் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். இந்த திரை உலக அனுபவம் எப்படி இருக்கிறது?

ஓம் சாந்தி ஓம் படத்திற்கு முன்னால் நான் ஐஸ்வர்யா என்ற கன்னட படத்தில் நடித்தேன். அன்றிலிருந்து நான் நடித்த ஒவ்வொரு சினிமாவும் எனக்கு ஒவ்வொரு பாட புத்தகம் போன்றது. அவற்றில் இருந்து நான் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொண்டிரு க்கிறேன். யாருக்கும் என் அளவுக்கு சிறப்பான அறிமுகம் கிடைத் திருக்காது. ஆனால் வாழ்க்கையில் ேதால்வியையும் சந்தித்தேன்.

அந்த தோல்விகளை எப்படி எதிர்கொண்டீர்கள்?


ஓம் சாந்தி ஓம் வெற்றியடைந்ததும், ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. அவை அனைத்தும் தோல்வியடைந்தன. அதோடு விரக்தியில் விழுந்தேன் நான். மனஅழுத்தம் என்னை ஆட்கொண்டது. பல நாட்கள் அறைக்குள் தனிமையில் அடைந்துகிடந்தேன். பின்பு ஒருநாள், அந்த நெருக்கடியில் இருந்து மீளவேண்டும் என்று நானே தீர்க்கமான முடிவினை எடுத்தேன். எத்தனை உறவினர்கள், நண்பர் கள் இருந்தாலும் மனஅழுத்தத்திற்குள் சிக்கிக்கொள்ளும் நபர்தான் அதில் இருந்து மீள வழிதேட வேண்டும். இனியும் தோல்விக்கு அடிபணியப்போவதில்லை என்ற முடிவினை எடுத்தேன். என் படங்கள் ஏன் தோல்வியடைந்தன என்பது பற்றி ஆழமாக சிந்தித்தேன். அப்போதுதான் நான் செய்த தவறுகள் எனக்கு புரிந்தன. கையில் கிடைத்தவாய்ப்புகளை எல்லாம் பயன்படுத் தாமல் அமைதியாக காத்திரு ந்தேன். அதன் மூலம் மனநெருக்கடியில் இருந்து மீண்டேன்.

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த மிகப் பெரிய சவால் எது?

நான் பெங்களூருவில் பிறந்த பெண். சொந்த வீடு, அப்பா, அம்மாவைவிட்டு விலகி அறிமுகமற்ற மும்பை நகரில் வந்து வசிக்க முடிவுசெய்தது, மிகப்பெரிய சவாலாக இருந்தது. முதல் படத்தில் நடித்துவிட்டு, என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று நினைத்து வருந்தி திணறிக்கொண்டி ருந்தது அடுத்த சவாலாக இருந்தது. சினி மாவில் கதாபாத்திரமாக வாழ்வது போன்று நிஜத்திலும் வாழ விரும்பிவிடுவேனோ என்ற கவலையும் இருக்கத்தான் செய்தது. அந்த சவால்கள் எல்லாம் ஒன்றுமில்லாதவை என்பது இப்போதுதான் புரிந்திருக்கிறது.

மும்பையில் வசிப்பதால் சொந்த வீட்டு நினைவுகள் வந்து போகின்றனவா?

மும்பையில் நடிகர் ஷாருக்கானும், டைரக்டர் பரா கானும்தான் என் குடும்பம். ஷாருக்கின் ரெட் சில்லீஸ் ஸ்டூடியோதான் என் வீடு. பரா என்னை பேபி என்றுதான் அழைப்பார். இருவரும் அதிக அன்புகாட்டி என்னை அரவணைக்கிறார்கள்.

விதியை நீங்கள் நம்புகிறீர்களா?

பரா டைரக்டு செய்து ஷாருக்கான் கதாநாயகனாக நடித்த ேஹப்பி நியூ இயர் சினிமாவில் நான் கதாநாயகியாக நடித்தேன். அவர்கள் திட்டமிட்டபடி ஷூட்டிங் நடந்திருந்தால், பத்து வருடங்களுக்கு முன்பே யாரோ கதாநாயகியாக நடித்து அந்த படம் வெளி வந்திருக்கவேண்டும். பல காரணங்களால் அந்த படத்தின் வேலை தடைபட்டு நீண்டுகொண்டே போனது. அதில் வரும் மோகினி சர்மா கதாபாத்திரத்தில் நடிக்க பரா, பல நடிகைகளை தொடர்பு கொண்டிருந் திருக்கிறார். யாராலும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. கடைசியில் ஷூட்டிங் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் எனக்கு அழைப்பு வந்தது. நான் கதையைகூட கேட்காமல் நடிக்க சம்மதித்தேன். அந்த சினிமா எனக்கு விதிக்கப்பட்டதாக நான் நம்புகிறேன். இதை தான் விதி என்று நினைக்கிறேன்.

உங்கள் வாழ்க்கையில் பணம் எந்த அளவுக்கு முக்கியமானதாக இருக்கிறது?

ரசிகர்களின் அன்பும், அங்கீகார மும் பணத்தைவிட விலைமதிப்புமி க்கது. எனக்கு மட்டுமல்ல எல்லா நடிகர் நடிகைகளுக்கும் அது பொருந்தும். கமர்சியலாக வெற்றி பெறும் படங்கள் எனக்கு மகிழ்ச்சி தருவதில்லை என்று நான் பொய் சொல்ல விரும்ப வில்லை. நான் நடிக்கும் எல்லா படங்களும் சூப்பர் ஹிட் ஆக வேண்டும் என்று நான் பிரார்்த்தனை செய்கிறேன். ஆனால் படம் வெற்றிபெற்று எனது கதாபாத்திரம் பேசப்படாவிட்டால் என் மனம் கவலைப்படும். நல்ல சினிமாக்கள் மூலம் என்னை ரசிகர்கள் நினைவில் வைத்தி ருக்க வேண்டும். அப்படி என் பெயர் சரித்திரத்தில் இடம்பெறவேண்டும்.

குறிப்பிட்ட எந்த நடிகரோடு நடிக்க முடியவில்லை என்று வருத்தப்படுகிறீர்கள்?

அமீர்கானுடனும், சல்மான்கானுடனும் நடிக்க இதுவரை எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் அதை நினைத்து நான் வருத்தப்படவில்லை. ஒவ்வொரு செயல் நடைபெறவும் அதற்கான நேரம் அமையவேண்டும். நேரம் சரியாக இருந்தால் வாய்ப்பு நம்மைத் தேடிவரும். அதற்காக பொறுமையாக காத்திருந்துதான் ஆகவேண்டும். இதுவும் விதி சார்ந்த விஷயம்தான்.