சினிமா செய்திகள்

அமெரிக்க ஆஸ்பத்திரியில் நடிகர் ரிஷி கபூருக்கு சிகிச்சை + "||" + Actor Rishi Kapoor was treated in the US hospital

அமெரிக்க ஆஸ்பத்திரியில் நடிகர் ரிஷி கபூருக்கு சிகிச்சை

அமெரிக்க ஆஸ்பத்திரியில் நடிகர் ரிஷி கபூருக்கு சிகிச்சை
அமெரிக்க ஆஸ்பத்திரியில் நடிகர் ரிஷி கபூருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

இந்தி திரையுலகில் புகழ் பெற்ற நடிகராக இருக்கும் ரிஷிகபூருக்கு 66 வயது ஆகிறது. இவர் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். ரிஷி கபூர் நடித்த மேரா நாம் ஜோக்கர், பாபி, ஹெல் ஹெல் மெயின், ஹபி ஹபி, கர்ஷ், அமர் அக்பர் அந்தோனி, ரபூ சக்கர், பனா, லவ் ஆஸ்கல், உள்ளிட்ட பல படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தின.

நடிகை நீத்து சிங்கை திருமணம் செய்து கொண்டார். ரிஷிகபூர் மகன் ரன்பீர் கபூர் தற்போது இந்தியில் முன்னணி கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார். ரிஷி கபூருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக மும்பையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக அவர் புறப்பட்டு செல்கிறார்.

இதுகுறித்து ரிஷிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது பணியில் இருந்து சிறிய ஓய்வு எடுத்துக் கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன். ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். தேவையில்லாத வதந்திகளையும் பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஆஸ்பத்திரியில் துப்பாக்கிச்சூடு - பெண் டாக்டர் உள்பட 4 பேர் பலி
அமெரிக்க ஆஸ்பத்திரியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் டாக்டர் உள்பட 4 பேர் பலியாகினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...