சினிமா செய்திகள்

ஆபாச வீடியோ உள்ளதாக மிரட்டல் - ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய இன்னொரு நடிகை + "||" + Threatening to have a porn video - another actress stuck to Srireddy

ஆபாச வீடியோ உள்ளதாக மிரட்டல் - ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய இன்னொரு நடிகை

ஆபாச வீடியோ உள்ளதாக மிரட்டல் - ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய இன்னொரு நடிகை
ஆபாச வீடியோ உள்ளதாக, ஸ்ரீரெட்டியிடம் இன்னொரு நடிகை சிக்கிக்கொண்டார்.

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி சினிமா வட்டாரத்தை கலக்கி வரும் நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து பலருடன் மோதி வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷை கண்டித்தார். “என்னை பார்த்து கீர்த்தி சுரேஷ் கேவலமாக சிரித்து இருக்கிறார். நீங்கள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க முடியாது. ஒரு நாள் போராடுபவர்கள் வலியை புரிந்து கொள்வீர்கள். உங்கள் சிரிப்பை மறக்க மாட்டேன். இப்போது நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டு இருக்கிறீர்கள்” என்றார்.

இப்போது தெலுங்கு நடிகை ஹேமாவுடன் மோதி இருக்கிறார். ஸ்ரீரெட்டியை ஹேமா ஏற்கனவே விமர்சித்து இருந்தார். அவர் கூறும்போது, ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தியது நல்லது அல்ல. இயக்குனர் தனது பார்வைக்கேற்ப நடிகர்-நடிகைகளுக்கு கதைக்கேற்ற கதாபாத்திரத்தை கொடுப்பார். யாருடைய பரிந்துரையிலும் வாய்ப்புகள் கொடுப்பது இல்லை. ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்” என்றார்.

இதனால் கோபமான ஸ்ரீரெட்டி ஹேமாவை கண்டித்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில், “ஹேமா நீங்கள், கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சையிடம் சொல்லி உங்களுடையை ஆபாச வீடியோவை நீக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு மக்கள் மத்தியில் நான் ஆடையை கழற்றியது பற்றி பேசுங்கள். உங்கள் கருப்பு பக்கத்தை பார்க்காமல் எனது போராட்டத்தை பற்றி பேசாதீர்கள். அமெரிக்க விஷயத்தில் நீங்கள் கருத்து சொன்னால் எனது அதிரடியை நீங்கள் எதிர்பார்க்க வேண்டி இருக்கும்” என்று கூறியுள்ளார். இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர் - ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்
பாலியல் தொல்லை கொடுப்பதாக, நடிகர் ஒருவருக்கு ஸ்ரீரெட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
2. பாலியல் புகார் சொன்னவர்: லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி
‘மீ டூ’ பரபரப்புக்கு முன்பே பாலியல் புகார்களால் திரையுலகை அதிர வைத்தவர் ஸ்ரீரெட்டி. பட வாய்ப்பு தருவதாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்து தன்னை ஏமாற்றி விட்டதாக அவர் கூறினார்.
3. ஆபாச வீடியோவை வெளியிடுவதாக பெண் என்ஜினீயருக்கு மிரட்டல்
ஆபாச வீடியோவை வெளியிடுவோம் என காதல் கணவரின் பெற்றோர் மிரட்டுவதாக பெண் என்ஜினீயர் திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.
4. ‘‘தமிழ் படங்களில் நடிக்க ஆசை’’ –ஸ்ரீரெட்டி
தமிழ் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
5. வீடியோ படத்தை வெளியிட்டார் : சிம்புவை பாராட்டிய ஸ்ரீரெட்டி
சமீபகாலங்களில் ஆந்திராவில் அதிகமாக அதிர்ச்சியூட்டியது யாரென்றால், அது ஸ்ரீரெட்டிதான்.