சினிமா செய்திகள்

“ராணி லட்சுமி பாயாக நடிப்பது பெருமை” - கங்கனா ரணாவத் + "||" + "Rani Lakshmi Bai is proud to act" - Kangana Ranawat

“ராணி லட்சுமி பாயாக நடிப்பது பெருமை” - கங்கனா ரணாவத்

“ராணி லட்சுமி பாயாக நடிப்பது பெருமை” - கங்கனா ரணாவத்
ராணி லட்சுமி பாயாக நடிப்பது பெருமையாக உள்ளதாக கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரணாவத், ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து தயராகும் மணிகர்னிகா படத்தில் ராணி லட்சுமிபாய் வேடத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய முதல் சுதந்திர போராட்ட வீராங்கனையாக ராணிலட்சுமிபாய் கருதப்படுகிறார். அவரது வாழ்க்கையை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் நோக்கோடு இந்த படத்தை தயாரிப்பதாக பட நிறுவனம் அறிவித்து உள்ளது. மணிகர்னிகா படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் நடிப்பது குறித்து கங்கனா ரணாவத் ஏற்கனவே கூறும்போது, “எனக்கு இது ஒரு மைல்கல் படம். வாள் சண்டை குதிரை ஏற்ற பயிற்சிகள் பெற்று நடிக்கிறேன். முழு உழைப்பையும் இந்த படத்துக்கு கொடுத்து இருக்கிறேன்” என்றார். இந்த நிலையில் மணிகர்னிகா படத்தின் டிரெய்லரை நாளை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

இதுகுறித்து கங்கனா ரணாவத் கூறும்போது, “மணிகர்னிகா டிரெய்லர் நாளை வெளியாவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் பெண்களின் கண்ணியத்தையும் மகத்துவத்தையும் போற்றும் படமாக இருக்கும். இதில் ராணி லட்சுமிபாயாக நடித்தது பெருமையாக இருக்கிறது. ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் படமாகவும் மணிகர்னிகா இருக்கும்” என்றார்.