சினிமா செய்திகள்

“அதிரடி கதாநாயகனாக ஆசைப்படும் நடிகர்கள்” - படவிழாவில் விஷால் பேச்சு + "||" + "Actors Wanted to Be Action Hero" - Vishal Talk at Film Festival

“அதிரடி கதாநாயகனாக ஆசைப்படும் நடிகர்கள்” - படவிழாவில் விஷால் பேச்சு

“அதிரடி கதாநாயகனாக ஆசைப்படும் நடிகர்கள்” - படவிழாவில் விஷால் பேச்சு
அதிரடி கதாநாயகனாக நடிக்க பல ,நடிகர்கள் ஆசைப்படுவதாக படவிழாவில் நடிகர் விஷால் கூறினார்.

விஷால், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள படம் சண்டகோழி-2. தெலுங்கில்‘ பந்தம் கோடி-2’ என்ற பெயரில் வெளியாகும் இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் விஷால் கலந்து கொண்டு பேசியதாவது:-

“சண்டகோழி படம் 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சினிமாவில் எனக்கு முக்கிய இடத்தை பெற்று தந்தது. அந்த படம் நிறைய பேருக்கு பிடித்துப்போய் கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்க முன்வந்தனர். ஆனாலும் எனது தந்தை ஒரு நல்ல படத்தில் நான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்த பட வாய்ப்பை பெற்று தந்தார்.

அவரால்தான் கதாநாயகனாக தமிழ், தெலுங்கில் என்னை நிலைநிறுத்தி இருக்கிறேன். நிறைய நடிகர்கள் அதிரடி கதாநாயகனாக பெயர் வாங்க ஆசைப்படுகிறார்கள். இந்த படம் இயல்பாகவே அந்த பெயரை எனக்கு வாங்கி கொடுத்து விட்டது. இயக்குனர் லிங்குசாமி நிறைய தடவை இதன் இரண்டாம் பாகத்துக்கான கதை சொன்னார். அதில் ஏதோ ஒரு குறை இருப்பதாக கருதி நான் நடிக்கவில்லை.

இப்போதுதான் கதை நன்றாக அமைந்து நடித்து இருக்கிறேன். இது எனது 25-வது படம். 24 படங்கள் நடித்து இருப்பதற்கு சண்டகோழி அடித்தளமாக அமைந்தது. இதன் 3-ம் பாகமும் வெளியாகும். இந்த படத்தை தெலுங்கில் வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் படத்தை பார்த்து தேசிய விருது கிடைக்கும் என்று கூறியிருக்கிறேன். இந்த படத்திலும் அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும். என்னை விட நன்றாக நடனம் ஆடி இருக்கிறார் என்று விஷால் கூறினார்.