சினிமா செய்திகள்

நடிகையை திட்டி, காமெடி நடிகரை அடித்தேனா? நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம் + "||" + Did you hit the comedy actor? Actor Prakash Raj Explanation

நடிகையை திட்டி, காமெடி நடிகரை அடித்தேனா? நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம்

நடிகையை திட்டி, காமெடி நடிகரை அடித்தேனா? நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம்
பிரகாஷ்ராஜ் சமீப காலமாக பொது வி‌ஷயங்கள் குறித்து துணிச்சலாக பேசி வருகிறார். பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்தார். இதனால் அந்த கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் சேரப்போவதாகவும் தகவல்கள் பரவின. அதனை பிரகாஷ்ராஜ் மறுத்தார்.

இந்த நிலையில் படப்பிடிப்பில் நடிகையை திட்டி காமெடி நடிகரை பிரகாஷ்ராஜ் அடித்ததாக தகவல் பரவி உள்ளது. திரிநாதராவ் இயக்கத்தில் ஹலோ குரு பிரேம கேசமே என்ற தெலுங்கு படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். இதில் ராம்போத்தினேனி, அனுபமா பரமேஸ்வரன், பிரணிதா சுபாஷ், நகைச்சுவை நடிகர் சப்தகிரி ஆகியோரும் நடிக்கின்றனர்.


ரெயில் நிலையம் போன்ற அரங்கு அமைத்து இதன் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜுக்கும், நகைச்சுவை நடிகர் சப்தகிரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது சப்தகிரியை பிரகாஷ்ராஜ் அடித்து விட்டதாகவும் தகவல் பரவியது. பிரகாஷ்ராஜ் அடித்ததை சுற்றி நின்ற 200 துணை நடிகர் நடிகைகள் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்பட்டது.

இதற்கு விளக்கம் அளித்து பிரகாஷ்ராஜ் கூறும்போது, ‘‘சப்தகிரியை நான் அறைந்ததாக பரவிய தகவலில் உண்மை இல்லை. நான் எதற்காக அவரை அடிக்க வேண்டும். சப்தகிரி வளர்ந்து வரும் நடிகர். அவரை வாழ்த்தினேன்’’ என்றார். அனுபமா பரமேஸ்வரன் சரியாக வசனம் பேசவில்லை என்று அவரை பிரகாஷ்ராஜ் திட்டியதாக கூறப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் தோல்வி ‘எனது கன்னத்தில் அறை விழுந்துள்ளது’ என கருத்து
நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் தோல்வி அடைந்தார். ‘எனது கன்னத்தில் அறை விழுந்துள்ளது’ என்று டுவிட்டரில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
2. மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாக போட்டி: தேர்தல் அறிக்கையை வெளியிட்டார், நடிகர் பிரகாஷ்ராஜ்
மத்திய பெங்களூரு சுயேச்சை வேட்பாளர் நடிகர் பிரகாஷ்ராஜ், தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் ஏரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
3. நமது நாட்டுக்கு மாற்று அரசியல் தேவை : நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி
நமது நாட்டுக்கு மாற்று அரசியல் தேவை என்றும், மோடி மீண்டும் பிரதமராகக் கூடாது என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.