சினிமா செய்திகள்

‘மணிகர்னிகா’ படம் டிரெய்லரில் ஜான்சி ராணியாக மிரட்டிய கங்கனா ரணாவத் + "||" + Gangas Ranawat, who threatened Jhansi as queen

‘மணிகர்னிகா’ படம் டிரெய்லரில் ஜான்சி ராணியாக மிரட்டிய கங்கனா ரணாவத்

‘மணிகர்னிகா’ படம் டிரெய்லரில் ஜான்சி ராணியாக மிரட்டிய கங்கனா  ரணாவத்
தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
தற்போது ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகும் மணிகர்னிகா படத்தில் ஜான்சி ராணியாக நடித்து வருகிறார்.

இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு ஜோத்பூர் கோட்டையில் நடந்தது. ஆங்கிலேயருக்கு எதிராக ஜான்சி ராணி போராடுவது போன்ற யுத்த காட்சிகளும் படமாக்கப்பட்டு உள்ளன. போரில் ஜான்சிராணியாக நடித்த கங்கனா ரணாவத் கயிற்றில் தொங்கி 40 அடி உயர மதில் சுவரை தாண்டி குதிக்கும் காட்சிகளை படமாக்கினர்.


அப்போது கங்கனா ரணாவத் தடுமாறி கீழே விழுந்து காலில் காயம்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சம்பவமும் நடந்தது. ஒருவாரம் ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் படத்தில் நடித்தார். கங்கனா ரணாவத் கூறும்போது, ‘‘மணிகர்னிகா எனக்கு மைல் கல் படம். ராணி லட்சுமிபாயாக நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்துக்காக வாள்சண்டைகள் கற்றேன். குதிரை சவாரி பயிற்சிகளும் பெற்றேன்’’ என்றார்.

தற்போது மணிகர்னிகா படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஆங்கிலேயர்களை போரில் வாளால் வெட்டி வீழ்த்தும் காட்சிகளில் கங்கனா ரணாவத் ஆவேசமாக நடித்துள்ளார். யுத்த காட்சிகள் மிரட்டலாக இருப்பதாக இந்தி பட உலகினர் பாராட்டி வருகிறார்கள்.