சினிமா செய்திகள்

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் "பேட்ட" படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு + "||" + 2th poster release of the "Petta"

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் "பேட்ட" படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் "பேட்ட" படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பேட்ட படத்தின் இரண்டாவது போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 165-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். ‘பேட்ட’ என்று பெயரிட்டு வடமாநிலங்களில் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர்.  

ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். பேட்ட படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். 

ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக்,  பாபி சிம்ஹா,  சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். 

இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று மாலை 7 மணியளவில் வெளியானது.  அதில்  நடிகர் ரஜினிகாந்த், இதுவரை இல்லாத வகையில் பெரிய மீசையுடன் வேட்டி சட்டையோடு பக்கா மாஸ் கிராமத்து ஆள் போல உள்ளார். 

இந்தப் போஸ்டரைத் தொடர்ந்து படம் தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.