சினிமா செய்திகள்

ரசிகர்கள் கடும் விமர்சனம் : சுஷ்மிதா சென் முகம் ‘பிளாஸ்டிக் சர்ஜரி’யால் அலங்கோலம் + "||" + Sushmita Sen face dizzy with 'plastic surgeon'

ரசிகர்கள் கடும் விமர்சனம் : சுஷ்மிதா சென் முகம் ‘பிளாஸ்டிக் சர்ஜரி’யால் அலங்கோலம்

ரசிகர்கள் கடும் விமர்சனம் : சுஷ்மிதா சென் முகம் ‘பிளாஸ்டிக் சர்ஜரி’யால் அலங்கோலம்
தமிழில் ‘ரட்சகன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சுஷ்மிதாசென். முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.
இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் இருந்தார். சுஷ்மிதா சென் 18 வயதிலேயே பிரபஞ்ச அழகி பட்டம் வென்றவர். 10 ஆண்டுகள் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அவருக்கு இப்போது 42 வயது ஆகிறது. 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார்.  இந்த நிலையில் சுஷ்மிதா சென் இளமையாக காட்சியளிக்க வெளிநாட்டுக்கு சென்று முகத்துக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு பிறகு உள்ள தனது முகத்தோற்றத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.


முகத்தை அலங்கோலப்படுத்தி இருப்பதாக விமர்சிக்கிறார்கள். ஒரு ரசிகர், ‘‘முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய நீங்கள் செலவழித்த பணமெல்லாம் வீண்’’ என்று கருத்து பதிவிட்டு உள்ளார். இன்னொரு ரசிகர், ‘‘உங்களை போன்ற வசதி படைத்தவர்கள் எதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்கிறீர்கள் என்று புரியவில்லை. உங்களுக்கு அழகான முகமும் பொலிவான தோற்றமும் இருந்தது. கடவுள் கொடுத்த அந்த பரிசை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு மாறாக ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அலங்கோலப்படுத்துகிறீர்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.