சினிமா செய்திகள்

உங்கள் ரகசியங்களை வெளியிடுவேன் : நடிகர் ராஜேந்திர பிரசாத்தை மிரட்டிய ஸ்ரீரெட்டி + "||" + Shri Reddy is threatened by actor Rajendra Prasad

உங்கள் ரகசியங்களை வெளியிடுவேன் : நடிகர் ராஜேந்திர பிரசாத்தை மிரட்டிய ஸ்ரீரெட்டி

உங்கள் ரகசியங்களை வெளியிடுவேன் : நடிகர் ராஜேந்திர பிரசாத்தை மிரட்டிய ஸ்ரீரெட்டி
நடிகை ஸ்ரீரெட்டி பட உலகினர் மீது தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகிறார். தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக பட்டியலை வெளியிட்டார்.
தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றனர்.

முன்னணி நடிகைகளும் பாலியல் தொல்லையில் சிக்கி இருப்பதாக கூறினார். சமீபத்தில் தன்னை பார்த்து கேவலமாக சிரித்ததாக நடிகை கீர்த்தி சுரேஷை சாடினார். ‘‘எப்போதும் உயரத்தில் இருக்க மாட்டீர்கள். ஒரு நாள் மார்க்கெட் சரியும். அப்போது பாதிக்கப்பட்டுள்ள நடிகைகளின் வலி புரியும்’’ என்று கூறினார்.


ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகிறது. இதில் ஸ்ரீரெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீரெட்டி தமிழ் படத்தில் நடிப்பதை விஷால் வரவேற்று இருக்கிறார். தற்போது சில தமிழ் படங்கள் உள்பட 200 படங்களில் நடித்துள்ள பிரபல தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தை ஸ்ரீரெட்டி கடுமையாக சாடி உள்ளார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில், ‘‘நடிகர் ராஜேந்தர பிரசாத் ஒரு மனநோயாளி. தயவு செய்து உடனடியாக நீங்கள் ஒரு மனநோய் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துவிடுங்கள். பெண்களுக்கு மரியாதை கொடுப்பது உங்கள் அகராதியில் இல்லை என்பது எனக்கு தெரியும். விரைவில் உங்களை பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன்’’ என்று கூறியுள்ளார்.

 இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ‘‘நடிகை ஸ்ரீரெட்டி புதிய புகார்’’
நடிகை ஸ்ரீரெட்டி முகநூல் பக்கத்தில் மீண்டும் புதிய புகாரை பதிவிட்டுள்ளார்.
2. ‘‘ஒரு தமிழ் நடிகர் என்னை அழிக்க பார்க்கிறார்’’ ஸ்ரீரெட்டி மீண்டும் புகார்
தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.
3. இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்புகள் தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்தி ஏமாற்றி விட்டதாக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறி பட உலகில் அதிர்வை ஏற்படுத்தினார்.
4. தெலுங்கு நடிகர் சங்க தலைவர் சிவாஜிராஜா மீது ஸ்ரீரெட்டி மோசடி புகார்
தெலுங்கு பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக பரபரப்பு புகார் கூறியவர் நடிகை ஸ்ரீரெட்டி.
5. அலுவலக பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை : நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசம்
சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக பரபரப்பு புகார் கூறியவர் நடிகை ஸ்ரீரெட்டி.