சினிமா செய்திகள்

ஆதரவற்றோர் இல்லம் கட்டும் ஹன்சிகா + "||" + Hansika constructing the Orphanage House

ஆதரவற்றோர் இல்லம் கட்டும் ஹன்சிகா

ஆதரவற்றோர் இல்லம் கட்டும் ஹன்சிகா
நடிகை ஹன்சிகா கைவசம் இப்போது 3 படங்கள் உள்ளன. விக்ரம் பிரபுவுடன் துப்பாக்கி முனை, அதர்வாவுடன் 100 ஆகிய படங்களில் நடிக்கிறார்.
ஹன்சிகாவின் 50–வது படமாக மஹா தயாராகிறது. ஹன்சிகா அளித்த பேட்டி வருமாறு:–

‘‘நான் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். மஹா படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கும். படத்தின் கதை பிடித்து இருந்தால் உடனே நடிக்க சம்மதிக்கிறேன். வணிக படங்களில் அதிகம் நடித்து இருக்கிறேன். மற்ற மொழி படங்களை விட தமிழ் படங்களில் நடிப்பது மிகவும் பிடிக்கிறது.


தமிழ் பெண்ணாகவே நான் மாறிவிட்டேன். மான் கராத்தே படத்தில் நடிப்பதற்காக 3 கதைகளை நிராகரித்தேன். எனது படத்தில் யார் கதாநாயகனாக நடிக்கிறார்கள். எனது கதாபாத்திரம் எப்படி இருக்கிறது என்றெல்லாம் பார்ப்பது இல்லை. அந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்றுதான் யோசிப்பேன்.

மலையாளத்தில் வில்லன் படத்தில் நடித்துள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்த நாளில் ஒரு ஆதரவற்ற குழந்தையை தத்து எடுப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறேன். மும்பையில் ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லம் ஒன்றை கட்டுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறேன். இதற்காக நான் வரைந்துள்ள ஓவியங்களை கண்காட்சியாக வைத்து நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளேன்.’’

இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை ஹன்சிகாவுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கை பற்றி பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
நடிகை ஹன்சிகாவுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கை பற்றி பதில் அளிக்க போலீஸ் கமி‌ஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.