சினிமா செய்திகள்

முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க தனுஷ் இயக்கும் 2-வது படம் + "||" + Dhanush will direct 2nd film

முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க தனுஷ் இயக்கும் 2-வது படம்

முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க தனுஷ் இயக்கும் 2-வது படம்
நடிகர் தனுஷ் அடுத்து ஒரு புதிய படத்தை டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.
தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான தனுஷ் முதன்முதலாக, `பவர் பாண்டி' என்ற படத்தை டைரக்டு செய்தார். அதில் ராஜ்கிரண், ரேவதி உள்பட மூத்த நடிகர்-நடிகைகள் நடித்து இருந்தார்கள்.

இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்து ஒரு புதிய படத்தை டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். `பவர் பாண்டி' படத்தில் ராஜ்கிரண் நடித்தது போல், இந்த புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இவருடன் முன்னணி நட்சத்திரங்களும் பங்கு பெறுகிறார்கள். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

தனுஷ் நடித்து வெற்றிமாறன் டைரக்டு செய்த `வட சென்னை' படம், வருகிற 18-ந் தேதி, ஆயுத பூஜை அன்று திரைக்கு வர இருக்கிறது. கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்‌ஷனில் தனுஷ் நடித்த `எனை நோக்கி பாயும் தோட்டா' படம், வருகிற தீபாவளி வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது.

அதைத்தொடர்ந்து, `முண்டாசுப்பட்டி,' `ராட்சசன்' ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் டைரக்‌ஷனில், ஒரு புதிய படத்தில் நடிக்கவும் தனுஷ் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.