சினிமா செய்திகள்

விமானம் ஓட்டிய காஜல் அகர்வால் + "||" + Kajal Agarwal plane driving

விமானம் ஓட்டிய காஜல் அகர்வால்

விமானம் ஓட்டிய காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் விவேகம், மெர்சல் படங்களுக்கு பிறகு பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கிலும் 2 படங்கள் கைவசம் உள்ளன. இந்த நிலையில் விமானம் ஓட்டிய அனுபவம் குறித்து காஜல் அகர்வால் கூறியதாவது:–

‘‘வாழ்க்கையில் உண்மையான திருப்தி நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு சாகசத்தை செய்யும்போது வரும். கொஞ்சம் தைரியமும், புத்திசாலித்தனமும் இருந்தால் போதும், அந்த மாதிரி அனுபவத்தை நாம் பெற முடியும். எனக்கு அதுபோல் ஏற்பட்ட அனுபவங்கள் நிறைய.


ஆனாலும் விமானம் ஓட்டிய அனுபவத்தை மறக்க முடியாது. சினேகிதிகளுடன் கோலாலம்பூர் சென்றேன். அங்கு ஒரு தனியார் ஜெட் விமானத்தை எடுத்தோம். அதில் 4 பேர் அமர்வதற்கு மட்டுமே இடம் இருக்கும். நான் பைலட்டின் பக்கத்து இருக்கையில் இருந்தேன். அப்போது விமானம் ஓட்ட ஆசை வந்தது. பைலட் அதற்கு உதவினார். அவர் ஆலோசனைப்படி நானே விமானத்தை ஓட்டி ஆகாயத்தை சுற்றி வந்தேன். உயரமான கட்டிடங்களுக்கு இடையே விமானம் பறந்ததை பார்த்து ஒரே ஆனந்தமாக இருந்தது. அப்போது ‘டுவின் டவர்’ மேலே விமானத்தை ஓட்ட வேண்டும் என்று பைலட்டிடம் சொன்னேன். அது முடியாது. அங்கு அனுமதி கிடையாது என்று அவர் கூறிவிட்டார்.  இதுபோல் எனது மனதுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய சாகசங்கள் நிறைய செய்து இருக்கிறேன்.’’

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நயன்தாரா சாதனையை முறியடித்த காஜல் அகர்வால்!
கங்கனா ரணாவத் நடித்த ‘குயீன்’ என்ற இந்தி படம், வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது.
2. ஆபாசமாக நடிப்பதா? காஜல் அகர்வாலுக்கு எதிர்ப்பு
இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து வெற்றிகரமாக ஓடிய குயின் படம் தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இதில் காஜல் அகர்வால் நடித்துள்ளார்.
3. ‘‘பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ - காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படம் விரைவில் திரைக்கு வருகிறது. அடுத்து கமல்ஹாசனுடன் இந்தியன்–2 படத்திலும் நடிக்கிறார். இந்த மகிழ்ச்சியில் இருக்கும் அவர் அளித்த பேட்டி வருமாறு:–
4. முத்தமிட்டு ஒளிப்பதிவாளர் அநாகரிகம் : காஜல் அகர்வால் ரசிகர்கள் எதிர்ப்பு
தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
5. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை
மேடையில் வைத்து முத்தமிட்ட பிரபல தொழில்நுட்ப கலைஞர், அதிர்ச்சியடைந்த காஜல் அகர்வால்.