சினிமா செய்திகள்

நல்ல தியேட்டர்கள் கிடைக்காததால் ஜோதிகா படம் தீபாவளிக்கு தள்ளிப் போகிறது + "||" + Good theaters are not available Jyothika will be postponed to Deepavali

நல்ல தியேட்டர்கள் கிடைக்காததால் ஜோதிகா படம் தீபாவளிக்கு தள்ளிப் போகிறது

நல்ல தியேட்டர்கள் கிடைக்காததால் ஜோதிகா படம் தீபாவளிக்கு தள்ளிப் போகிறது
மும்பையிலும், வட மாநிலங்களிலும் ‘சூப்பர் ஹிட்’ ஆக ஓடிய ‘தும்ஹாரிசுலு’ என்ற இந்தி படம், ‘காற்றின்மொழி’ என்ற பெயரில், தமிழில் தயாரானது.
கதை நாயகியாக ஜோதிகா இதில்  நடித்து இருக்கிறார். ராதாமோகன் டைரக்டு செய்துள்ளார். இதற்கு முன்பு இருவரும் இணைந்து பணிபுரிந்த ‘மொழி,’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதனால், ‘காற்றின் மொழி’ படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மணிரத்னம் டைரக்‌ஷனில், ஜோதிகா நடித்த ‘செக்க சிவந்த வானம்,’ சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படத்தை அடுத்து ஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’க்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்த படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானின் மருமகன் ஏ.எச்.காஷிப் இசையமைத்து இருக்கிறார்.


‘காற்றின்மொழி,’ இம்மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது, அந்த படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது. தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மழைக்காலம் ஆரம்பமாகி விட்டதுதான் ‘காற்றின்மொழி’ தள்ளிப்போனதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. நல்ல தியேட்டர்கள் கிடைக்காதது, இன்னொரு காரணம் என்கிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘‘ஜோதிகா மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு’’ –சிம்பு பேட்டி
ஜோதிகா மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு என்று நடிகர் சிம்பு கூறினார்.
2. காற்றின் மொழி
ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில், சிம்பு நடித்திருக்கிறார்.