மாவட்ட செய்திகள்

நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா போலீசில் புகார் + "||" + Actress Dhanushree Dutta complains to Nana Patekar

நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா போலீசில் புகார்

நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா போலீசில் புகார்
இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ளார்.
மும்பை,

தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டினார்.

இது இந்தி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.


இந்த பரபரப்பான நிலையில் நேற்று நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.