சினிமா செய்திகள்

இளம் கதாநாயகிகளுக்கு நடிகை ஜெயபாரதி அறிவுரை + "||" + Actress Jayaparathi advises young heroines

இளம் கதாநாயகிகளுக்கு நடிகை ஜெயபாரதி அறிவுரை

இளம் கதாநாயகிகளுக்கு நடிகை ஜெயபாரதி அறிவுரை
கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க நிவாரண பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. நடிகர்-நடிகைகள் பலர் வெள்ள நிவாரண நிதி வழங்கி உள்ளனர்.
 பழம்பெரும் நடிகை ஜெயபாரதியும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை நேரில் சந்தித்து ரூ.10 லட்சம் நிதி வழங்கினார்.

பின்னர் அவர் நிருபரிடம் கூறும்போது, ‘‘நான் ஈரோட்டில் பிறந்து மலையாளத்தில் 420–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தேன். கேரள வெள்ளத்தில் மக்கள் பட்ட கஷ்டம் வேதனையை ஏற்படுத்தியது. எனவே நிவாரண பணிக்கு என்னால் இயன்ற நிதியை வழங்கி இருக்கிறேன்’’ என்றார்.


சினிமாவில் மீண்டும் நடிப்பீர்களா? என்று கேட்டபோது, ‘‘நடிக்க மாட்டேன் என்று எப்போதுமே சொல்லவில்லை. நல்ல கதை மற்றும் கதாபாத்திரம் அமைந்தால் மீண்டும் நடிப்பது பற்றி சிந்திப்பேன். தமிழில் அலாவுதீனும் அற்புத விளக்கும், வரு‌ஷம் 16, ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே, மைக்கேல் மதன காமராஜன், முத்து உள்பட பல படங்களில் நடித்துள்ளேன். சேதுமாதவன் இயக்கத்தில் சிவகுமாருடன் நடித்த மறுபக்கம் படத்துக்காக தமிழில் முதல் தேசிய விருது பெற்றதையும் பெருமையாக நினைக்கிறேன்.’’ என்றார்.

இப்போதைய இளம் நடிகைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, ‘‘எல்லோரும் திறமையாக நடிக்கிறார்கள். நன்றாக நடிக்கிறார்கள். சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் செழிப்பாக இருந்தால்தான் சினிமா சிறப்பாக இருக்கும். தயாரிப்பாளர்கள் நஷ்டமடையாமல் பார்த்துக் கொள்வது நடிகர்-நடிகைகள் கடமை’’ என்றார்.