சினிமா செய்திகள்

சூர்யா படத்தில் பிரதமராக மோகன்லால் + "||" + Mohanlal is the prime minister in Surya's film

சூர்யா படத்தில் பிரதமராக மோகன்லால்

சூர்யா படத்தில் பிரதமராக மோகன்லால்
செல்வராகவன் இயக்கிய ‘என்.ஜி.கே’ படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இப்போது கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே அயன், மாற்றான் படங்கள் வெளிவந்தன.
கே.வி.ஆனந்த் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சிராஜ் ஜானி, சாயிஷா, சமுத்திரக்கனி  ஆகியோரும் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். இந்த நிலையில் மோகன்லால் பிரதமராக நடிப்பதாகவும் அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா வருகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


மோகன்லால் பிரதமர் தோற்றத்தில் இருப்பதுபோன்ற படமும் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தி வாசகங்களுடன் மோகன்லால் பிரதமர் வேடத்தில் இருக்கும் பேனர் மற்றும் அதன் அருகில் சூர்யா கோட் சூட்டில் மிடுக்காக நடந்து செல்வது போன்ற இன்னொரு படமும் வெளியாகி இருக்கிறது.

பிரதமருக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை சூர்யா முறியடிப்பது போன்று திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறுகின்றனர். ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. அரசியல் திகில் படமாக தயாராகிறது. இது சூர்யாவுக்கு 37–வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. டிரைலரை வெளியிடும் மம்முட்டி
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ‘ஒடியன்’ படத்தின் டிரைலரை வெளியிட இருக்கிறார்கள்.
2. தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மோகன்லால் மிரட்டல் இல்லை -நடிகர் சங்கம் மறுப்பு
நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மோகன்லால் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட தகவலை நடிகர் சங்கம் (அம்மா) மறுத்து உள்ளது.
3. வெங்கட் பிரபுவின்‘பார்ட்டி’ படத்துக்காக சூர்யா–கார்த்தி, சொந்த குரலில் பாடினார்கள்
‘பார்ட்டி’ படத்துக்காக நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் சொந்த குரலில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள்.
4. பாலியல் வழக்கில் சிக்கிய திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்த்தது ஏன்? மோகன்லால் விளக்கம்
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி கைதானதால் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட திலீப்பை புதிய தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள மோகன்லால் மீண்டும் சங்கத்தில் சேர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
5. மலையாளத்திலும் ‘பிக்பாஸ்’ மோகன்லாலுக்கு ரூ.12 கோடி சம்பளம்?
வட இந்தியாவில் கலக்கிய பிக்பாஸ் டெலிவி‌ஷன் நிகழ்ச்சி இப்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.