சினிமா செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு : 10 ஆண்டுகள் ஆனாலும் உண்மை என்றுமே மாறாது-நானா படேகர் + "||" + Nana Patekar says truth which was there 10 years ago, stands true even today

பாலியல் குற்றச்சாட்டு : 10 ஆண்டுகள் ஆனாலும் உண்மை என்றுமே மாறாது-நானா படேகர்

பாலியல் குற்றச்சாட்டு : 10 ஆண்டுகள் ஆனாலும் உண்மை என்றுமே மாறாது-நானா படேகர்
பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்த 10 ஆண்டுகள் ஆனாலும் உண்மை என்றுமே மாறாது என நடிகர் நானா படேகர் கூறினார்.

மும்பை

சில நாட்களுக்கு முன்னதாக பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து பலரும் வெளிப்படையாக புகார் அளிக்க தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து   விளக்கம் அளிக்க நானா படேகர் இன்று செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அவரின் மகன் நேற்று மாலை பத்திரிகையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பினார்.

தன் வீட்டின் முன்பு கூடியிருந்த மீடியாவை சந்தித்த நானா படேகர் கூறும் போது 

 எந்த சேனலிடமும் பேசக் கூடாது என்று என் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நான் அவரின் பேச்சை கேட்க விரும்புகிறேன். நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு கூறியதையே தான் தற்போதும் கூறுகிறேன், உண்மை என்றுமே மாறாது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை தனுஸ்ரீ தத்தா மீது வழக்குப்பதிவு
ராஜ் தாக்கரே குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை தனுஸ்ரீ தத்தா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2. நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு ராஜ்தாக்கரே எச்சரிக்கை
தமிழில் ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள தனுஸ்ரீதத்தா தேசிய விருதுகள் பெற்ற நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
3. நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு உதவ முடியாது : சினிமா கலைஞர்கள் சங்கம் அறிக்கை
நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு உதவ முடியாது என்று சினிமா கலைஞர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...