சினிமா செய்திகள்

கத்தியுடன் பாய்ந்த வாலிபர்மலையாள நடிகருக்கு கொலை மிரட்டல் + "||" + Murder threat to Malayalam actor

கத்தியுடன் பாய்ந்த வாலிபர்மலையாள நடிகருக்கு கொலை மிரட்டல்

கத்தியுடன் பாய்ந்த வாலிபர்மலையாள நடிகருக்கு கொலை மிரட்டல்
மலையாள நடிகர் குஞ்சக்கோ பாபனுக்கு வாலிபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் குஞ்சக்கோ பாபன். இவர் 50–க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தை மலையாளத்தில் எடுத்தபோது விஜய் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். குஞ்சக்கோ பாபன் கண்ணூரில் நடந்த சினிமா படப்பிடிப்புக்கு செல்ல எர்ணாகுளம் தெற்கு ரெயில் நிலையத்தில் அமர்ந்து இருந்தார்.  அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு குஞ்சக்கோ பாபன் மீது பாய்ந்தார். உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று ஆவேசமாக கூச்சல் போட்டார். இதில் குஞ்சக்கோ பாபன் நிலைகுலைந்து அதிர்ச்சியானார். அவர் பிடியில் இருந்து தப்பிக்க போராடினார். 

அப்போது சற்று தள்ளிநின்று கொண்டிருந்த சிலர் ஓடி வந்து இளைஞரை பிடித்துக் கொண்டனர். அதன்பிறகு குஞ்சக்கோ பாபன் ரெயிலில் ஏறி படப்பிடிப்புக்கு சென்று விட்டார். கண்ணூர் ரெயில் நிலையத்தில் இறங்கியதும் அங்குள்ள ரெயில்வே போலீசில் தன்னை எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் ஒருவர் கொலை செய்ய முயன்றதாக புகார் அளித்தார். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இருந்த இளைஞரை அடையாளம் கண்டு கைது செய்தார்கள். குஞ்சுக்கோ பாபனை கொலை செய்ய முயன்றது ஏன்? என்று அவரிடம் விசாரணை நடக்கிறது.