சினிமா செய்திகள்

நடிகர் ஆலோக் நாத் மீது மற்றொரு பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு + "||" + Dealt with four years of harassment by slapping the man in question: Navneet Nishan on Alok Nath

நடிகர் ஆலோக் நாத் மீது மற்றொரு பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு

நடிகர் ஆலோக் நாத் மீது மற்றொரு பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு
பிரபல நடிகர் ஆலோக் நாத் மீது மற்றொரு பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
மும்பை,

தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து இது போன்ற பாலியல் துன்பறுத்தல்களால் பாதிக்கப்பட்ட  பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை வெளியிட தொடங்கி உள்ளனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான "குயின்" திரைப்படத்தின் இயக்குநர் விகாஸ் பகால் மீது அப்படத்தில் நடித்த பிரபல நடிகை கங்கனா ரனாவத் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.  பகால் மீது கடந்த 3 வருடங்களுக்கு முன் பெண் ஒருவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாகவும் கங்கனா பேசியுள்ளார்.

இந்த நிலையில், பிரபல நடிகர் ஆலோக் நாத் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இயக்குனரும், எழுத்தாளருமான வின்டா நந்தா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர்  ஆலோக் நாத், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இயக்குனர் வின்டா முகநூல் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு பார்ட்டிக்கு என்னை ஒருவர் அழைத்தார். அவரின் மனைவியான என் நெருங்கிய தோழி ஊரில் இல்லை. ஆனால் தியேட்டர் குரூப்பை சேர்ந்தவர்கள் அடிக்கடி சந்திப்பதால் எனக்கு சந்தேகம் ஏற்படவில்லை. பார்ட்டிக்கு சென்ற இடத்தில் எனக்கு மதுவில் ஏதோ கலந்துவிட்டார்கள். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. இரவு 2 மணிக்கு அந்த வீட்டில் இருந்து கிளம்பினேன். என்னை யாருமே டிராப் செய்யவில்லை. அது எனக்கு வித்தியாசமாக இருந்தது.

இரவு நேரத்தில் ஆள் இல்லாத தெருவில் நடந்தபோது ஒருவர் தன் காரில் வந்து என்னை வீட்டில் டிராப் செய்வதாக கூறினார். நானும் அவரை நம்பி காரில் ஏறினேன். அதன் பிறகு நடந்தது எனக்கு சரியாக நினைவில் இல்லை. என் வாயில் மது ஊற்றப்பட்டது தெரிந்தது. என்னை ஏதோ செய்கிறார் என்று தெரிந்தது. மறுநாள் மதியம் கண் விழித்தபோது உடம்பு வலித்தது. என்னை பலாத்காரம் செய்ததோடு மட்டும் அல்லாமல் என் வீட்டில் வைத்தே என்னை கஷ்டப்படுத்தியிருக்கிறார். என்னால் படுக்கையில் இருந்து எழ முடியவில்லை என அதில் தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து அதில், நான் டிவியின் நம்பர் ஒன் நிகழ்ச்சியான தாரா சீரியலை தயாரித்து, எழுதினேன். அந்த நபர் என் கதையின் ஹீரோயின் மீது கண் வைத்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு அவரை பிடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அந்த சீரியலில் நடித்துள்ள நடிகை நவ்னீத் நிஷான், வின்டாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

அவர் கூறும்பொழுது, வின்டாவுக்கு ஏற்பட்ட பயங்கர வலியை நானும் உணர்ந்தேன்.  அந்த மனிதரின் அதிகாரத்தினால் நானும் பாதிப்படைந்தேன்.  அவரை கன்னத்தில் அறைந்ததற்காக 4 வருடங்கள் நான் துன்புறுத்தப்பட்டேன்.

அது கற்பனை செய்ய முடியாதது.  எனக்கு நிகழ்ச்சியில் நடிக்க முடியாமல் போனது.  ஊடகத்தில் அந்த நபரால் நான் அவமானப்படுத்தப்பட்டேன்.  எனது போராட்டத்தினை நான் அங்குமிங்கும் தொடர்ந்தேன்.  

இந்த அதிகார வலிமை மற்றும் பாலியல் ஆதிக்கத்தினை வெளி கொண்டு வந்ததற்காக நான் ஆழ்ந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.  இது சிறந்த தருணம் என கூறினார்.

மீடூ இயக்கத்தில் உள்ள ஒவ்வொரு பெண் மற்றும் ஆணுக்கும் நான் ஆதரவு தெரிவிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.