சினிமா செய்திகள்

நடிகர் திலீப்குமார் கவலைக்கிடம் + "||" + Actor Dilip Kumar Serious condition

நடிகர் திலீப்குமார் கவலைக்கிடம்

நடிகர் திலீப்குமார் கவலைக்கிடம்
பழம்பெரும் நடிகர் திலீப்குமார் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பழம்பெரும் நடிகர் திலீப்குமார் உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திலீப்குமாருக்கு 95 வயது ஆகிறது. 

சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார். இப்போது மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது. இந்தி பட உலகில் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் திலீப்குமார், 1944–ம் ஆண்டு ‘ஜவான் பத்தா’ படம் மூலம் அறிமுகமானார். 

ஆன், தேவதாஸ், ஆசாத், கங்கா ஜமுனா, ‌ஷக்தி, கர்மா உள்பட 100–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘ராம் அவுர் ஷியாம்’ என்ற படத்தை தழுவி தமிழில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘எங்க வீட்டு பிள்ளை’ படம் வெள்ளி விழா கண்டு சாதனைகள் நிகழ்த்தியது. முன்னாள் இந்தி கதாநாயகி சாய்ரா பானுவை திருமணம் செய்துகொண்டார்.

மத்திய அரசின் உயரிய பத்ம விபூ‌ஷண், பத்ம பூ‌ஷண், தாதா சாகேப் பால்கே விருதுகளை பெற்றவர் இவர்.