சினிமா செய்திகள்

“ரஜினிகாந்தை இயக்குவது கடவுள் ஆசீர்வாதம்”நடிகர் தனுஷ் பேட்டி + "||" + Actor Dhanush interview

“ரஜினிகாந்தை இயக்குவது கடவுள் ஆசீர்வாதம்”நடிகர் தனுஷ் பேட்டி

“ரஜினிகாந்தை இயக்குவது கடவுள் ஆசீர்வாதம்”நடிகர் தனுஷ் பேட்டி
“ரஜினிகாந்தை வைத்து நான் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதை கடவுளின் ஆசீர்வாதமாக கருதுவேன்” என்று நடிகர் தனுஷ் கூறினார்.
வெற்றிமாறன் டைரக்‌ஷனில் உருவாகியிருக்கும் ‘வடசென்னை’ படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருப்பதுடன், படத்தை தயாரித்தும் இருக்கிறார். அவருக்கு ஜோடிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர், வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய ‘ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்.

படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில், ‘வட சென்னை’ படக்குழுவினர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது தனுசிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு தனுஷ் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- வெற்றிமாறன் டைரக்‌ஷனில் நீங்கள் 3 படங்களில் நடித்து இருக்கிறீர்களே... அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அவர் என்னை சகித்துக்கொண்டார். நான், அவரை சகித்துக்கொண்டேன். இரண்டு பேரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டிருப்பதால், எங்களுக்குள் கருத்து வேறுபாடு வரவில்லை. கஷ்டத்திலும், நஷ்டத்திலும் என்னுடன் இருப்பவர், வெற்றிமாறன். அவர் என் சகோதரர்.

கேள்வி:- ‘வடசென்னை’ படத்தில் அமீர், சமுத்திரக்கனி, வெற்றிமாறன் ஆகிய 3 டைரக்டர்கள் இருக்கிறார்களே... மூன்று பேரில் யாரைப் பார்த்து பயப்பட்டீர்கள்?

பதில்:- நான் யாரைப் பார்த்தும் பயப்படவில்லை. என்னைப் பார்த்தும் யாரும் பயப்படவில்லை.

கேள்வி:- உங்களுக்கு ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால்...?

பதில்:- அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். அதை எனக்கு கிடைத்த கடவுள் ஆசீர்வாதமாக கருதுவேன்.

இவ்வாறு தனுஷ் கூறினார்.

நடிகர்கள் டேனியல் பாலாஜி, பவன், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், டைரக்டர் வெற்றிமாறன் ஆகியோரும் நிருபர்கள் மத்தியில் பேசினார்கள்.