சினிமா செய்திகள்

‘மீ டூ’ இயக்கத்துக்கு ஐஸ்வர்யாராய் ஆதரவு + "||" + Aishwarya Rai supported Me Too movement

‘மீ டூ’ இயக்கத்துக்கு ஐஸ்வர்யாராய் ஆதரவு

‘மீ டூ’ இயக்கத்துக்கு ஐஸ்வர்யாராய் ஆதரவு
‘மீ டூ’ இயக்கத்தை ஐஸ்வர்யாராய் வரவேற்று உள்ளார்.
நடிகைகள் பாலியல் தொல்லைகளை வலைத்தள ‘மீ டூ’ இயக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். பிரபலமாக உள்ள பெரும் தலைகள் எல்லாம் இதில் உருள்கின்றன. இந்த நிலையில் ‘மீ டூ’ இயக்கத்தை ஐஸ்வர்யாராய் வரவேற்று உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“மீ டூ இயக்கம் நல்ல அறிகுறியாக தெரிகிறது. பெண்கள் உரிமைக்கான ஒரு தொடக்கமாகவே இதை பார்க்கிறேன். சில விஷயங்களில் சட்டப்படி தீர்வு கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். பெண்கள் குரல் இப்போது ஓங்கி ஒலிக்க தொடங்கி உள்ளது. இதற்கு ‘மீ டூ’ போன்ற சமூக வலைத்தளங்கள் உதவுகின்றன.

நான் எப்போதுமே பெண்கள் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறேன். எனது கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறேன். உலகம் குறுகிய வட்டத்துக்குள் வந்துவிட்டது. எங்கே இருந்து பேசினாலும் சமூக வலைத்தளங்கள் எல்லோருக்கும் கொண்டு சேர்த்து விடுகின்றன. என்னை பொறுத்தவரை சர்ச்சையான விஷயங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவே விரும்புகிறேன்.”

இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார்.