சினிமா செய்திகள்

மீடூ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் பிரபலங்கள் + "||" + Amitabh Bachchan- Radhe Maa views on #MeToo movement

மீடூ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் பிரபலங்கள்

மீடூ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் பிரபலங்கள்
இந்தியாவில் பிரபலமாகி வரும் மீடூ இயக்கத்திற்கு பிரபலங்கள் அமிதாபச்சன், ராதே மா போன்றோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.#MeToo

மும்பை

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் இன்று தனது 76வது பிறந்த நாளை கொண்டாடினார். இன்று அவர்  மீடூ இயக்கத்திற்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார். 

சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா  இந்தியாவில் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கும் மீடூ இயக்கத்திற்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.  மும்பையில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அவரது வழக்கமான சிவப்பு ஆடை அணிந்து  வந்த ராதே மா,  பெண்கள் தங்கள் மீதான பாலியல் தொல்லைகளுக்கு எதிராக தங்கள் குரலை உயர்த்த வேண்டும் என்று கூறினார். 

நானாபேடேகர் மற்றும் ஆலோக் நாத் போன்ற பாலிவுட் பிரபலங்கள் மீதான மீடூ பாலியல் புகார்கள் குறித்து  கேட்டபோது, பெண்கள் தவறுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று ராதே மா கூறினார்.

மும்பை போரிவலி புறநகர் பகுதியில் உள்ள ராதே மாவின் பக்தரான தொழிலதிபர் சஞ்சீவ் குப்தாவின் வீட்டில் தங்கினார்.