சினிமா செய்திகள்

நடிகர் முகேஷ் விளக்கம்“பெண் டைரக்டரை படுக்கைக்கு அழைத்தது நான் அல்ல” + "||" + Actor Mukesh Description

நடிகர் முகேஷ் விளக்கம்“பெண் டைரக்டரை படுக்கைக்கு அழைத்தது நான் அல்ல”

நடிகர் முகேஷ் விளக்கம்“பெண் டைரக்டரை படுக்கைக்கு அழைத்தது நான் அல்ல”
பெண் டைரக்டரை படுக்கைக்கு அழைத்தது நான் அல்ல என்று நடிகர் முகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகளும், பெண் இயக்குனர்களும் பாலியல் புகார் கூறி வருகிறார்கள். பெண் டைரக்டர் டெஸ் ஜோசப், தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள முகேஷ் மீது பாலியல் புகார் தெரிவித்தார். முகேஷ் மார்க்சிஸ் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறார்.

டெஸ் ஜோசப் கூறும்போது, “1999-ம் ஆண்டு டெலிவிஷனில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை முகேஷ் தொகுத்து வழங்கியபோது, அதன் படப்பிடிப்புக்காக நான் ஓட்டலில் தங்கி இருந்தேன். அப்போது அடிக்கடி எனது அறைக்கு வந்தார். ஓட்டல் ஊழியர்களை வற்புறுத்தி அவரது அறை அருகே எனது அறையையும் மாற்றினார். அவரிடம் இருந்து தப்பி விமானம் பிடித்து ஓடி வந்து விட்டேன்” என்றார்.

இதற்கு பதில் அளித்து முகேஷ் கூறியதாவது:-

நான் சினிமா குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறேன். எனது மனைவி, தாய், சகோதரி உள்ளிட்ட அனைவருமே திரைத்துறையில் இருக்கிறார்கள். எனவே ‘மீ டூ’ இயக்கத்தை முழு மனதோடு ஆதரிக்கிறேன். எல்லா பெண்களும் இந்த பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். டெஸ் ஜோசப் என்மீது சொன்ன பாலியல் புகார் உண்மை அல்ல.

தவறாக என்னை அவர் அடையாளப்படுத்தி இருக்கலாம். போனில் அவரை படுக்கைக்கு அழைத்தது நான் அல்ல. டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளருடன் எனக்கு நெருங்கிய நட்பு இருந்தது. அந்த நிகழ்சிக்கு பிறகு மீண்டும் என்னை அழைத்து இன்னொரு நிகழ்ச்சி நடத்துவது பற்றி பேசினார். நான் தவறாக நடந்து இருந்தால் எப்படி என்னை மீண்டும் அழைத்து பேசி இருப்பார்.”

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார்: மகளிர் ஆணையத்தில் நடிகை சுருதி ஹரிகரன் வாக்குமூலம்
நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் தொடர்பாக, மகளிர் ஆணையத்தில் நடிகை சுருதி ஹரிகரன் வாக்குமூலம் அளித்தார்.
2. அர்ஜூன் மீது பாலியல் புகார்: நடிகை சுருதி ஹரிகரனுக்கு நடிகர் கிஷோர் ஆதரவு
அர்ஜூன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை சுருதி ஹரிகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் கிஷோர், கருத்து சுதந்திரத்தை யாரும் தடுக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
3. ராகுல் ஜோரி மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஒருவாரத்திற்குள் விளக்கம் அளிக்க பிசிசிஐ நிர்வாக குழு உத்தரவு
ராகுல் ஜோரி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஒருவாரத்திற்குள் விளக்கம் அளிக்க பிசிசிஐ நிர்வாக குழு உத்தரவிட்டுள்ளது.
4. எம்.ஜே. அக்பருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்படும்- அமித் ஷா
மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் புகார் குறித்து பரிசீலிக்கப்படும் என பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறி உள்ளார். #METOO
5. ஐகோர்ட்டு நீதிபதி மீது பாலியல் புகார்: பதவி விலகிய பெண் நீதிபதி வழக்கு - ம.பி. ஐகோர்ட்டு பதிவாளருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
ஐகோர்ட்டு நீதிபதி மீது பாலியல் புகார் கூறி பதவி விலகிய பெண் நீதிபதி வழக்கில், மத்திய பிரதேச ஐகோர்ட்டு பதிவாளருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...