சினிமா செய்திகள்

உடல் எடையை குறைக்க அனுஷ்கா கடைசி முயற்சி + "||" + Anushka last try to reduce body weight

உடல் எடையை குறைக்க அனுஷ்கா கடைசி முயற்சி

உடல் எடையை குறைக்க அனுஷ்கா கடைசி முயற்சி
நடிகை அனுஷ்கா உடல் எடையை குறைக்கும் தீவிர முயற்சியில் இருக்கிறார்.
அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக உடல் எடையை கூட்டினார். அதன்பிறகு அதை குறைக்கவே முடியவில்லை. கடும் உடற்பயிற்சிகள், யோகா, உணவு கட்டுப்பாடு என்று பல முயற்சிகளில் ஈடுபட்டும் எடை குறையவில்லை. பாகுபலி இரண்டாம் பாகம் படத்தில் அவரது குண்டு உடம்பை கம்ப்யூட்டர் மூலம் ஒல்லியாக்கி காட்டினார்கள்.

எடை அதிகமானதால் பட வாய்ப்புகள் குறைந்தன. நயன்தாராவைப்போல் இளம் கதாநாயகர்களுடன் அவரால் நடிக்க முடியவில்லை. பெரிய கதாநாயகர்களும் தங்கள் படங்களில் வாய்ப்பு அளிக்காமல் அனுஷ்காவை புறக்கணித்தனர். இதனால் பல மாதங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் சும்மா இருக்கிறார். உடற்பயிற்சிகள் பலன் அளிக்கவில்லை. அவரது எடையை கேலி செய்து மீம்ஸ்களும் பரவுகின்றன.

சமீபத்தில் ஐதராபாத், மும்பையில் உள்ள பிரபல டாக்டர்களை அணுகி எடையை குறைக்க ஆலோசனைகள் கேட்டு வந்தார். இந்த நிலையில் இந்தி நடிகைகள் ஆஸ்திரியா சென்று இயற்கை முறையில் எடையை குறைத்துவிட்டு வருவதாகவும், அங்கு சென்றால் ஒல்லியாகி திரும்பலாம் என்றும் அவருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அனுஷ்காவும் ஆஸ்திரியாவுக்கு பயணம் ஆகி உள்ளார்.

அங்கு ஒரு மாதம்வரை தங்கி இருந்து சிகிச்சை பெற்று உடம்பை ஒல்லியாக்கி விட்டு இந்தியா திரும்பும் முடிவில் இருக்கிறார். அதன்பிறகு அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும் என்று தெரிகிறது. பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர்.