சினிமா செய்திகள்

சிரஞ்சீவி படத்தில் அமிதாப்பச்சன் புதிய தோற்றம் + "||" + Amitabh Bachchan's new look in Chiranjeevi's film

சிரஞ்சீவி படத்தில் அமிதாப்பச்சன் புதிய தோற்றம்

சிரஞ்சீவி படத்தில் அமிதாப்பச்சன் புதிய தோற்றம்
சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்கும் அமிதாப்பச்சனின் புதிய தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் புதிய படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. இது அவருக்கு 151-வது படம் ஆகும். சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிறது. ஆங்கிலேய ஆட்சியை இந்தியாவில் இருந்து வெளியேற்ற நடந்த முதல் புரட்சியான சிப்பாய் கலகத்துக்கு முன்பே ஆந்திர மக்கள் மத்தியில் சுதந்திர உணர்வை ஏற்படுத்தியவராக இவர் கருதப்படுகிறார்.

இந்த படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கின்றனர். சிப்பாய் கலகத்தின் மாவீரனாக கருதப்படும் மங்கள் பாண்டே கதாபாத்திரத்துக்கு இணையான ரேனாட்டி சூரியடு என்ற வீரன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி வருகிறார். இந்த படத்தின் மூலம் முதல் தடவையாக தெலுங்கில் அவர் காலூன்றுகிறார்.

தமன்னா புரட்சி பெண்ணாக வருகிறார். சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் அதிக செலவில் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு பிரமாண்ட அரண்மனை அரங்குகள் அமைத்து விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படத்தில் 8 நிமிடம் போர்க்கள யுத்த காட்சிகள் இடம்பெறுகின்றன. இதற்கு மட்டும் ரூ.54 கோடி செலவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்கும் அமிதாப்பச்சனின் வயதான தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.